பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pulse

1190

pulse position


pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்தத்தில் நேர்மின்னாகவோ எதிர்மின்னாகவோ திடீரென ஏற்படும் மாறுதல். இது மின்சுற்று வழிக்குத் தகவலை அனுப்புகிறது.

pulse code modulation : துடிப்புக் குறியீடு; துடிப்புக் குறிப்பேற்றம் : பீ. ஏஎம் அமைப்பில் ஒப்புமை சமிக்கையை தொடர்ந்து இடைவேளையில் மாதிரி எடுத்து ஒரு துடிப்பு அலைமாற்ற வீச்சு கலைமாற்ற (ஆம்ப்ளிட்டியூடு மாடுலேட்டர்) அலைவடிவை ஏற்படுத்தலாம். ஒரு சமிக்கையின் உயர்ந்த அலை வரிசையின் இரட்டை மதிப்பை மாதிரி அளவாகக் கொண்டு ஒரு உவமச் சமிக்கையைத் தொடர்ந்து மாதிரியெடுத்தால் குரலை மீண்டும் உருவாக்குவது போதுமானது. மாதிரித் துடிப்பின் கால இடைவெளிக்கு மட்டும் திறக்குமாறு அமைக்கப்பட்டுள்ள வாயிலைக் கொண்ட மின்சுற்றில் ஒத்திசைவு உவமச் சமிக்கையை அனுப்பி மாதிரி எடுக்கப்படுகிறது. இதில் வெளியீடாக வருவது PAM சமிக்கை.

pulse duration modulation : துடிப்பு கால அளவுப் பண்பேற்றம் : தொடர்முறை வடிவில் இருக்கும் தகவலை இலக்கமுறைச் செய்தியாக மாற்றியமைத்து குறியாக்கம் செய்வதில் ஒரு வழிமுறை. துடிப்பின் கால அளவை மாற்றியமைத்து இக்குறியாக்கம் செய்யப்படுகிறது. பண்பேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு, வீச்சு கொண்ட தொடர்ச்சியான துடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. பண்பேற்றத்தின் போது துடிப்பின் கால அளவு மாற்றப்பட்டு தகவல் குறியாக்கம் செய்யப்படுகிறது.

pulse modulation : துடிப்புப் பண்பேற்றம்; துடிப்பு ஏற்ற இறக்கம் : தகவல்களை அனுப்புவதற்கு ஏற்ற இறக்கம் செய்யப்பட்டுள்ள அல்லது பண்பியல்புப்படுத்தப்பட்டுள்ள துடிப்புகளின் தொடர் வரிசையைப் பயன்படுத்தல். PAM. PPM, PDM போன்றவை இந்த ஏற்ற இறக்க வகையைச் சேர்ந்தவை.

pulse position modulation : துடிப்பு இடநிலைப் பண்பேற்றம் : தகவலைக் குறியாக்கம் செய்யும்போது துடிப்புகளின் இட நிலையை மாற்றியமைத்து சமிக்கையைப் பண்பேற்றம்

செய்யும்முறை. பண்பேற்றம் செய்