பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pulse regenerators

1191

punch, keyboard


யப்படுவதற்கு முன்பு சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு மற்றும் வீச்சு கொண்டதாக இருக்கும். பண்பேற்றத்தின்போது துடிப்பின் இடநிலை மாற்றப்பட்டு, தகவல், குறியாக்கம் செய்யப்படுகிறது.

pulse regenerators : துடிப்பு மீட்டுருவாக்கிகள் : தொலை பேசிக்கம்பியின் பாதை நெடுகிலும் டிடிஎம் சமிக்கைகள் வலுப்பெறுகின்றன; பிரிகின்றன. பிழைகள் சேர்க்கப் படவில்லையென்றால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் துடிப்பு இருக்கிறதா இல்லையா என்று கூறமுடியும். தேவைப்படும் துல்லியத்துக்குள் துடிப்பின் அலைவடிவத்தை வைத்திருக்க கம்பி நெடுகிலும் துடிப்பு மீட்டுருவாக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருமுறை துடிப்பு புதுப்பிக்கப்படும் போதும் ஒரு புதிய, சிதையாத துடிப்பு கம்பியில் அனுப்பப்படுகிறது. துடிப்பு இல்லை என்று கண்டுபிடிக்கப்படும் போது, துடிப்பு அனுப்பப்படுவதில்லை.

pulses, clock : கடிகாரத் துடிப்பு .

punch : துளையிடல்.

punch buffer, card : அட்டைத் துளை இடையகம்.

punched card : துளையிட்ட அட்டை : தரவு செய்முறைப்படுத்தும் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் காகித அட்டை. இதில் நூற்றுக்கணக்கான தனித்தனி அமைவிடங்களில் நுண்ணிய செவ்வகத் துளைகள் இடப்படுகின்றன. இத்துளைகள் எண்ணியல் மதிப்பளவுகளையும் ஆல்பா எண்ணியல் குறியீடுகளையும் குறிக்கின்றன.

punched card code : துளை அட்டை குறிமுறை.

punched tape : துளை நாடா .

punching card அட்டை துளைத்தல்.

punching position : துளையிடு இட நிலை : ஒர் அட்டைப் பத்தியின் பிரிவினைப் பகுதிகளில் ஒன்று. இதில் ஒரு துளையினை இடலாம்.

punching station : துளையிடும் நிலையம் விரற்கட்டைத் துளையிடு எந்திரம், அட்டைத் துளையிடு எந்திரம், ஆகியவற்றில். துளையிடும் செய்முறைக்காக ஒர் அட்டையினைப் பொருத்துவதற்கான பகுதி.

punch, key : விசைத் துளையிடல்.

punch, keyboard : விசைப்பலகை துளையிடல்.