பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

query language

1197

question mark


query language : கேட்டறி மொழி; வினவல் மொழி; வினவு மொழி : 1. ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தரவு எதனையும் வரவழைப் பதற்குப் பயன்படுத்தப்படும் நிரல்களின் தொகுதி. இதனை "தரவு கையாள் மொழி (date manipulating language) stangyub கூறுவர். இது "செயல்முறை யற்ற வினவல் மொழி (nonprocedural query language) என்பதுடன் ஒப்பிடத்தக்கது. 2. மிக்க உயர் நிலை இயற்கை மொழி. பயனாளர், குறியீடுகள் அல்லது உயிர் நிலைச் சொற்கள் எதனையும் அறிந்து கொள்ளா மலேயே, ஒரு கணினியமை விடம் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கிறது. இதில், தனி வகை மென்பொருள்கள், பயனாளரின் வேண்டுகோளைப் பகுப்பாய்வு செய்து, அதன் பொருளை விளக்கிக் கூறி, காட்சித்திரையில் தக்க பதில் களைக் காட்டுகின்றன.

query programme : கேட்டறி நிரல் தொடர் : எண்ணி, காட்டி, ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான பதிவேடுகளை எடுத்துவரும் மென்பொருள். ஒரு வாடிக்கையாளரின் கணக்கை திரையில் கொண்டு வருவது போன்று ஒன்று அல்லது இரண்டு தேடல்களை மட்டும் கொண்ட பெரிய பயன்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் அல்லது எந்தச் சூழ்நிலையிலும் தேடி, தேர்ந்தெடுக்கக்கூடிய கேள்வி மொழியைக் குறிப்பிடுவதாக வும் இருக்கலாம்.

query response : வினவல் விடை; வினாவுக்குரிய பதில் : இயக்குபவரின் குறிப்பிட்ட வேண்டுகோளுக்குப் பதிலாக ஒரு கணினி முனையம் அனுப்பும் செய்தி.

question answer : வினா விடை : கணினியுடன் செய்திப் பரி மாற்றம் செய்து கொள்வதற் கான செய்முறை. பயனாளரி டம் கணினி ஒரு கேள்வியைக் கேட்கும்; அதற்குப் பயனாளர் பதிலளிப்பார்.

question mark : வினாக்குறி; கேள்விக்குறி : சில இயக்க முறைமைகளிலும் பயன்பாடு களிலும் எந்தவொரு ஒற்றை எழுத்துக்காகவும் பயன்படுத்தப் படும் பதிலீட்டுக் குறியீடு. எம்எஸ்-டாஸ், விண்டோஸ் என்டி, ஒஎஸ்/2 ஆகிய இயக்க முறைமைகளில் பயன்படுத்தப்