பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

queue

1198

queuing system


படும் இரண்டு பதிலீட்டுக் யீடுகளில் (wildcard characters) bகேள்விக் குறியும் ஒன்று.

queue : வரிசை : சாரை : கணினியின் செயற்பாட்டுக்கு உட்படுவதற்கு வரிசையில் காத்திருக்கும் இனங்களின் குழுமம். எடுத்துக்காட்டு : ஒரு தரவு அனுப்பீட்டுப் பொறி யமைவில் அனுப்பப்பட இருக்கும் செய்திகள். இனங் களின் வரிசைமுறையானது, செய்முறை முந்துரிமையை நிருணயிக்கிறது.

queued access method : வரிசை அணுகுமுறை; சாரை அணுகல் முறை : அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு வெளி ப் பாட் டு ச் செயல்முறைகளில் காலத் தாழ்வுகளைத் தவிர்க்கலாம்.

queuing : வரிசைமுறையாக்கம் : சாரையாக்கம் தரவு செய் முறைப்படுத்தும் வரிசையைக் கட்டுப்படுத்தும் உத்தி.

queuing system : வரிசைமுறை அமைப்பு : ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கேஸ் கம்பெனிகள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம். வருகின்ற அழைப்புகளை வரிசைப்படுத்தி, மின்னணு முறையில் அழைத்தவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பப் படுகிறது. சான்றாக, இயக்கு பவர்கள் இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இயக்கு பவர் (ஆப்பரேட்டர்) கிடைத்தவுடன் உங்களுக்குப் பதில் கிடைக்கும். நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் என்று பதில் வரும். ஒவ்வொரு அழைப்பும் அது வரும் வரிசையில் கவனிக்கப் பட்டு உள்ள முகப்புக்கு அனுப்பப்படுகிறது. முதலில் வருவது. முதலில் போக வேண்டும் என்ற கொள்கை யின்படி வரிசைமுறை அமைப்பு வேலை செய்கிறது. இதன்படி காத்திருக்கும் நேரம் எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஒவ்வொரு இயக்குநருக்கும் காலியாக