பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

queuing theory

1199

quicksort


சமமான வேலை கிடைக்கவும் இது உதவுகிறது.

queuing theory : வரிசை முறையாக்கக் கோட்பாடு; சாரைக் கோட்பாடு : பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோட்பாட்டின் ஒரு வடிவம். நகரும் அலகுகளின் வரிசை முறைகளைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. தரவுகளின் அல்லது முழுச் செய்திகளின் துணுக்குகளை வரிசைமுறையில் அமைப்பது இதில் உள்ளடங்கும்.

quibinary code : இரட்டுறு இரும எண் குறியீடு : பதின்ம எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும எண் குறியீடிட்ட பதின்ம குறியீடு. இதில் ஒவ்வொரு பதின்ம எண்ணும், ஏழு இரும எண் களினால் குறிக்கப்படும்.

quick disconnect : விரைவுத் தொடர்பு முறிவு : விரைவுத் துண்டிப்பு : பொருத்து இணைப் பியை விரைவாகப் பூட்டவும், திறக்கவும் அனுமதிக்கும் மின் னியல் இணைப்பு வகை.

quickdraw : விரைவுவரை : மெக்கின்டோஷில் அமைக்கப்பட்டுள்ள வரைகலைக் காட்சி முறை. பயன்பாட்டிலிருந்து கட்டளைகளை ஏற்று, அதற் கேற்ற பொருள்களை திரையில் வரைகிறது. மென்பொருள் உரு வாக்குபவர்கள் பணியாற்றக் கூடிய ஒரு தொடர்ச்சியான இடைமுகத்தை இது அளிக்கிறது.

quick format : உடனடிப் படிவம் : கோப்பு ஒதுக்கும் பட்டியல் மற்றும் ஒரு வட்டின் வேர் தரவு பட்டியலை விலக்கி காலியாகத் தோற்றமளிக்க வைக்கும் ஒரு டாஸ் கட்டளை. ஆனால், இது வட்டின்மீதுள்ள கோப்பு தரவுவை நீக்கவோ அல்லது மோசமான பகுதிகளை நுண்ணாய்வு செய்யவோ போவதில்லை. ஏற்கனவே, படிவம் அமைக்கப்பட்ட வட்டை உடனடியாகப் படிவம் அமைக்க இது விரைவான வழியைத் தருகிறது.

quicksort : விரைவுத் தொகுப்பு : வேக வகைப்படுத்தல்; வேக வரிசையாக்கம் 1962-ல் சி. ஏ. ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்க முறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த் தந்திர முறையை அடிப்படையாகக்