பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quicktime

1200

quit2


கொண்டது. இம்முறைப்படி முதலில் வரிசையாக்கப்பட வேண்டிய பட்டியலில் மைய மதிப்பு தேடிக் கண்டறியப் படும். அச்சாணி (pivot) மதிப் பென இது அழைக்கப்படு கிறது. இவ்வுறுப்பை சிறிது சிறிதாக நகர்த்தி அதன் இயல்பான இடத்தில் இருத்த வேண்டும். அதன் பிறகு அச்சாணி மதிப்பைவிடக் குறைவான மதிப்புள்ள உறுப்பு கள் ஒருபுறமாகவும், அதிக மதிப்புள்ள உறுப்புகள் மறுபுறத்திற்கும் தள்ளப்படு கின்றன. இப்போது இரு பட்டியல்கள் பெறப்படுகின்றன. அடுத்த கட்டமாக, இரு பட்டியல்களிலும் தனித் தனியாக மேற்கண்ட முறை செயல்படுத்தப்படும். முழுப் பட்டியலும் வரிசையாக்கப் படும்வரை தொடர்ந்து பட்டியல் பிரிப்பு நடைபெறும்.

quicktime : உடனடி நேரம் : குவிக் டைம் : மெக்கின்டோஷ் அமைப்பு 7-க்கான பல் ஊடக விரிவாக்கங்கள். ஒலி, ஒளி திறன்களை அளிக்கிறது.

quickwin : குவிக்வின்; விரைவுப் பயன் : மைக்ரோசாஃப்ட் நிறு வனத்தின் 'சி' மற்றும் ஃபோர்ட்ரான் வாலாயம்களின் நூலகம். டாஸ் பயன்பாடுகளை விண் டோஸ் சூழ்நிலையில் விரை வில் ஏற்ற அனுமதிக்கிறது. எழுத்து சார்ந்த பயன்பாடுகள் மீண்டும் அளவிடக்கூடிய விண்டோஸ்களில் ஒடுகின்றன.

quinary : ஐந்து சார்ந்த : பிகு வினரி (biquinary) குறியீடாகப் பயன்படுத்துவது, இதில் பதின்ம எண் இணை எழுத்து களாகவோ அல்லது எண்களா கவோ பயன்படுவது. இதில் a=0 அல்லது b=0, 1, 2, 3 அல்லது 4 ஆக மதிப்பிடப்படும். முதல் கணிப்பியாகிய மணிச்சட்டம் இதைப் பயன்படுத்தியது.

quit : வெளியேறு : 1. எஃப் டீபீ தரவுத் தொடர்பில் பயன்படும் ஒரு கட்டளை. கிளையன் கணினி தன்னைத் துண்டித்து விடும்படி வழங்கன் கணினிக்கு அனுப்பும் கோரிக்கை. 2. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில், தொகுப்பை விட்டு வெளியேற உதவும் கட்டளை.

quit : வெளியேறு : 1. முறைப் படியான வெளியேற்றம். 2. ஒரு மென்பொருள் பயன்பாட்டை இயல்பான முறையில் மூடி விட்டு இயக்க முறைமையின் கட்டுப்பாட்டுக்குத் திரும்புதல்.