பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

R

1202

radian


R

R : ஆர் : பதிவேடு (Register), வேண்டுகோள், மறு அமைவு (Reset) என்பனவற்றின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

race condition : போட்டி நிலை;பந்தய நிலை : இரு கணினி நிரல்கள் ஒருங்கே செயற்படும்போது, எது முதலில் முடிவடையும் என்பதை அறிய முடியாத ஐயப்பாட்டுநிலை.

rack : அடிச்சட்டம், செருகும் சட்டம் : தொகுப்பிகள், அவற்றின் மின்வழங்கீட்டு அலகுகள் போன்ற மின்னியல், மின்னணுவியல் அல்லது பிற சாதனங்களை ஏற்றி வைக்கக்கூடிய உலோகச்சட்டம் அல்லது அடிச்சட்டம் அல்லது செருகுச் சட்டம்.

rack mounted : சட்டகச் சாதனம் : ஒர் உலோகச் சட்டகத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பிகள். சோதனைச் சாதனம், நாடா இயக்கிகள், தொழில் துறைக் கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள் பெரும்பாலும் சட்டகத்தில் ஏற்றிய அலகுகளாகவே அமைந்துள்ளன.

RAD : ரேடு : அதிவேகப் பயன்பாட்டு உருவாக்கம் எனப் பொருள்படும் Rapid Application Development என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி அமைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் ஒரு வழிமுறை. முழுத் திட்டப்பணியும் முடியும்வரைக் காத்திராமல், சிறுசிறு கூறுகளாகப் பிரித்து அவை முடிந்தவுடன் அவ்வப்போது நடை முறைப்படுத்திவிடும் முறை. ஜேம்ஸ் மார்ட்டின் என்பவர் முதன்முதலில் இம்முறையை உருவாக்கிச் செயல்படுத்திக் காட்டினார். கேஸ் கருவிகள் (CASE Tools) மற்றும் காட்சி முறை நிரலாக்கச் (Visual Programming) சூழல்களில் இவ்வழிமுறை பயன் படுத்தப்பட்டது. கேஸ் என்பது கணினி உதவியிலான மென்பொருள் படைப்பாக்கம் (Computer Aided Software Engineering) என்பதன் சுருக்கம்.

radial lines : ஆரைக் கோடுகள்.

radially : நிறல் திக்கு.

radian : ஆரைக்கோணம் : ஒரு வட்டத்தில், அந்த வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளமுடைய ஒரு வில் மூலம் எதிர் வீழ்வாகும் மையக் கோணம்.