பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

radio station guide

1204

radix-minus


radio station guide : வானொலி நிலைய வழிகாட்டி.

radiowave : மின்காந்த அலை.

RADIUS : ரேடியஸ் : தொலைபேசிப் பயனாளர் தொலைதூர சான்றுறுதி சேவை நெறிமுறை எனப் பொருள்படும் Remote Authentication Dial-ln User Service Protocol என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பயனாளர் ஒரு பிணைய வழங்கனில் இணைத்துக்கொள்ள முயலும்போது, அவர் அனுமதி பெற்ற பயனாளர்தானா என்கிற சான்றுறுதியும், அணுகல் அனு மதியையும் வழங்குவதற்கெனத் தனியாக ஒரு சான்றுறுதி வழங்கன் (Authentication Server) இருக்கும். இணையத்திற்கென முன்மொழியப்பட்ட நெறிமுறை இது.

radix : ஆதார எண், அடிமான எண்;அடிப்படை எண் : ஒர் எண்மான முறையில் ஆதார எண். எடுத்துக்காட்டு : இரும எண்மான முறையில் ஆதார எண் '2' . 'ஆதாரம்' (base) என்பதும் இதுவும் ஒன்றே.

radix complement : ஆதாரக் குறை நிரப்பு.

radix-minus-1 complement : அடியெண்-கழித்தல்-1 நிரப்பெண் : அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் : குறிப்பிட்ட இலக்கங்கள், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இடம்பெறும் எண் முறையில், இயலக்கூடிய அதிகப்பட்ச எண் மதிப்பிலிருந்து, ஒர் எண்ணைக் கழித்தால் வரும் விடையே அந்த எண்ணின் அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் எனப்படுகிறது. 0 முதல் 9 வரை பத்து இலக்கமுள்ள பதின்ம எண் முறையில் ஐந்து இலக்க எண்களை எடுத்துக் கொள்வோம். இதில் அதிகப்பட்ச மதிப்புள்ள எண் 99999. 01234 என்ற எண்ணின் அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் என்பது 99999-01234=98765 ஆகும். ஆக, இந்த எண் முறையில் எந்தவோர் எண்னின் குறைஎண் (Negative) அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண்ணோடு ஒன்றைக் கூட்டிக்கொள்ள வேண்டும் (ஏனெனில்-a+a=0). இரும எண்முறையில் இரண்டு இலக்கங்களே உள்ளன. இங்கு அடியெண் 2. அடியெண்ணுக்கு ஒன்று குறைந்த நிரப்பெண் என்பது

1-ன் நிரப்பெண் (11s complement) ஆகும். மின்சுற்றுஅமைப்பில் தலைகீழாக்கி (Inverter) மூலம் ஒர் இரும எண்ணின் ஒன்றின் நிரப்