பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RAM Cram

1208

random file organisation


போய்விட்டது. ஒருசில பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு.

RAM cram:குறிப்பின்றி அனுகும் நினைவகச் செறிவு:பயன்பாடுகளை இயக்குவதற்கான பற்றாக்குறை நினைவுப் பதிப்பகம். குறிப்பாக 1MB நினைவுப் பதிவு வரம்புடைய DOS மற்றும் சொந்தக் கணினிகள்.

RAMDAC:ரேம்டாக்:குறிப்பின்றி அணுகு நினைவக இலக்க முறையிலிருந்து தொடர் முறைக்கு மாற்றி என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். விஜிஏ மற்றும் சில எஸ்விஜிஏ ஒளிக்காட்சி தகவி அட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிப்பு. ஒரு படப்புள்ளியின் இலக்கமுறைத் தரவுவை திரையகம் திரையிடத் தகுந்த முறையில் தொடர்முறைத்(Analog)தகவலாய் மாற்றித் தரும். பொதுவாக ரேம் டாக் சிப்பு ஒளிக்காட்சிப் படங்களின் கூர்மையை மேம்படுத்தும்.

RAM DISK:ரேம் வட்டு.

random:தற்செயலான:தாறுமாறான,குறிப்பற்ற,வரிசையிலா.

random access:குறிப்பின்றி அணுகுதல்;குறிப்பிலா அணுகல்;நேரடி அணுகுமுறை:சேமிப்பு வரிசை முறையைச் சார்ந்திராதிருக்கிற ஒரு சேமிப்பக அமைவிடத்திலிருந்து தரவுகளைப் பெறுகிற அல்லது தரவுகளைச் செலுத்துகிற செய்முறை. நேரடி அணுகுதல் என்பது இதன் மற்றொரு பெயர். இது,வரிசைமுறை அணுகுதல்(sequential access)என்பதிலிருந்து வேறுபட்டது.

random access device:குறிப்பிலா அணுகு சாதனம்.

random access file:குறிப்பிலா அணுகு கோப்பு:நேரடி அணுகு கோப்பு.

random access storage:குறிப்பிலா அணுகு சேமிப்பகம்,நேரடி அணுகு தேக்ககம்.

random block:குறிப்பற்ற தொகுதி;குறிப்பிலா தொகுதி:கோப்பினை அணுகுவதற்கான கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி முறையில் தனியொரு குறிப்பற்ற கோப்புச் செயற்பாட்டின் மூலம் படிக்கப்படுகிற அல்லது எழுதப்படுகிற ஒர் ஆவணத் தொகுதி.

random file organisation:குறிப்பற்ற கோப்பு அமைப்பாக்கம்;குறிப்பிலா கோப்பு அமைவனம்: