பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

random files

1209

random processing


ஆவணங்களை நேரடியாக அணுகும் வகையில் ஒரு கோப்பினை உருவாக்குதல்.

random files : குறிப்பிலாக் கோப்புகள் : எவ்வித வரிசை முறையிலும் அமைக்கப்படாத கோப்புகள். நேரடி அணுகுச் சாதனத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள பதிவுகளின் முகவரி அடிப்படையில் தரவுகள் மீட்கப்படுகின்றன.

random logic design : குறிப்பிலாத் தருக்கமுறை வடிவமைப்பு : வெவ்வேறு தருக்க முறை மின்சுற்று வழிகளைப் பயன்படுத்தி ஒரு பொறியமை வினை வடிவமைத்தல்.

random noise : ஒழுங்கிலா இரைச்சல், குறிப்பிலா இரைச்சல் : வீச்சுக்கும் நேரத்துக்கும் (Amplitude and Time) தொடர்பில்லா சமிக்கை. ஒழுங்கு வரிசை யில்லாப் பல அலைவரிசைகளின் கலப்பு. குறிப்பிட்ட தோரணி கொண்டதாகவோ, முன்னறியக் கூடியதாகவோ இருக்காது.

random number : குறிப்பிலா எண் : இலக்கங்களின் தோரணியற்ற வரிசைமுறை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோதனைகளில் குறிப்பின்மை மெய்ப் பிக்கப்படும். தற்செயலாக உண்டாக்கப்படும் ஊகிக்க முடியாத எண்.

random number generation : குறிப்பிலா எண் உருவாக்கம் : முன் தீர்மானிக்க முடியாத எண் வரிசையாக உருவாக்குதல். ஒருநேரத்தில் பட்டியலில் எந்த இடநிலையில் எந்த எண் வரும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது. உண்மையில் பார்த்தால் குறிப்பிலா எண் உருவாக்கம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. கணினியில் பயன்படுத்தப்படும் செயலாக்க முறையை உண்மையில் போலியான குறிப்பிலா எண் உருவாக்கம் என்றுதான் கூற வேண்டும்.

random-number generator : குறிப்பிலா எண் உருவாக்கி : ஒரு போலிக் குறிப்பிலா எண்ணை அல்லது போலிக் குறிப்பிலா எண்களின் வரிசையை குறிப்பிட்ட வரம்புகளுக்குள் உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ள கணினி செயல்முறை அல்லது வன்பொருள்.

random processing : குறிப்பிலா செய்முறைப்படுத்துதல்;குறிப்பிலா செயலாக்கம் : தரவுகளைக் குறிப்பின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்முறைப் படுத்துதல். இதுவும், 'நேரடி அணுகு செய்முறைப்படுத்துதல்