பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rasterization

1212

rat's nest


வரை கலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரை கலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப்பட தட்டச்சு, மின்நிலை வரைவுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆவணத்தின் ஒரு பக்கத்திலுள்ள ஒவ்வொரு படப்புள்ளி (pixel) யின், ஒளிர்மை, நிறம் ஆகியவற்றின் மதிப்பு களைக் கணக்கிட்டு, நெறிய வரைகலைப் படிமத்தை உள்ளவாறே மீட்டுருவாக்கும் திறன் இச்சாதனத்துக்கு உண்டு.

rasterization : ராஸ்டர் மயமாக்கம்;ராஸ்டர் முறையாக்கம் : நெறிய வரைகலையை (Vector Graphics-புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப் படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள் மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப்படக்கூடிய, படப் புள்ளித் தோரணிகளால் உருவாக்கப்படும் அதே மாதிரியான படிமங்கள்) மாற்றியமைத்தல்.

rasterization of vectors : நெறியாக்க ராஸ்டராக்கம் : நெறியாக்கங் களாலான அல்லது கோட்டுக் கூறுகளாலான வரைகலைப் பொருள்களின் ராஸ்டர் வரைகலைத் திரைகள், புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு, லேசர் அச்சடிப்பிகளுக்கான வெளிப்பாட்டுப் புள்ளிக்குறிகளாக மாற்றுதல். நெறியாக்க வரைகலை முனையங்களையும் வரைவிகளையும் பயன்படுத் தினாலன்றி, பொருள்சார்ந்த வரைகலைகள் அனைத்தும், காட்சிக்காகவும் அச்சடிப்பதற்காகவும் ராஸ்டர் உருக்காட்சிகளாக மாற்றப்படுதல் வேண்டும்.

raster Scan : விரிவாக்க நுண்ணாய்வு;விரிவாக்க வருடல் : காட்சித்திரையில் காட்சிப் பகுதியை வரிவரியாக உருப்பெருக்கி உருக்காட்சியை உருவாக்குதல்.

rate, clock : கடிகார வீதம்.

rate, keying-error : விசைப்பிழை வீதம்.

rate, read : படிப்பு வீதம்.

rate, utilization : பயன்படுத்து வீதம்.

rational number : பின்ன எண்.

rat's nest : எலிக் கூடு;எலிவளை : அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற,