பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

raw data

1213

ray tube store, cathode


அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்திருப்பதற்கு மேற்கொண்டு அமைப்பிகளை இணைப்பதும், மேம்படுத்துவதும் தேவைதானா என்பதை நிருணயிப்பதை இது எளிதாக்குகிறது.

raw data : செப்பமற்ற தரவு : மூலத் தரவு : செய்முறைப்படுத்தப்படாத தரவு. இந்தத் தரவு படிப்பதற்குரிய ஒர் எந்திரச்செய்தித் தொடர்புச் சாதனத்தில் இருக்கலாம்;இல்லாமலும் இருக்கலாம்;இதனை'மூலத்தரவு' (original data) என்றும் கூறுவர்.

raw mode : கச்சாப் பாங்கு;செப்பமற்ற பாங்கு : எழுத்து அடிப்படையிலான ஒரு சாதனத்தை யூனிக்ஸ் மற்றும் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமைகள் நோக்கும் முறை. அச்சாதனத்தின் அடையாளக்குறி செப்பமற் பாங்கு எனத் தெரியவரின், இயக்க முறைமை உள்ளிட்டு எழுத்துக் குறிகளை வடிகட்டாது. நகர்த்தி திரும்பல் (carriage return), கோப்பிறுதிக் குறியீடுகள், வரியூட்டம் (line feed) மற்றும் தத்தல் குறியீடுகள் (tabs) போன்ற குறியீடுகளுக்கு இயக்க முறைமை, சிறப்புவகைக் கவனிப்பு எதுவும் தருவதில்லை.

ray tracing : கதிர் படியெடுப்பு : உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு படிமத்தின் ஒவ்வொரு படப்புள்ளியின் (pixel) நிறம், அடர்வு ஆகியவை கணக்கிடப்படு கின்றன. இதன் செயலாக்கத்திறன் அடிப்படையில் இம்முறை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கதிரின் ஒளி விலகல், ஒளிச்சிதறல், ஒளி உறிஞ்சல் ஆகியவற்றையும் படக்கூறுகளின் ஒளிர்மை, மறைப்பின்மை மற்றும் பிரதிபலிக்கும் தன்மை இவற்றையும், பார்வையாளர், ஒளிமூலம் இவற்றின் இடநிலை ஆகியவற்றையும் கணினி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ray tube, cathode : எதிர்மின் கதிர்க்குழாய்.

ray tube store, cathode : எதிர் மின்கதிர்க்குழாய் சேமிப்பு.