பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

RCA connector

1214

reader, magnetic ink


RCA connector : ஆர்சிஏ இணைப்பி : கலப்பொலிக் (stereo) கருவி அல்லது கலப்பு ஒளிக்காட்சித் திரையகம், கணினியின் ஒளிக்காட்சித் தகவி -இவை போன்ற கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சிக் கருவிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் இணைப்பி.

ஆர்சிஏ இணைப்பி

R&D : ஆர்&டி : ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்று பொருள்படும் Research and Development என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

RDBMS : தொடர்பு நிலைத் தரவு தள மேலாண்மைப் பொறியமைவு : பன்முக அட்டவணைகளை அந்த அட்டவணைகளுக்குள் அடங்கிய பொதுவான தரவு இனங்கள் அல்லது புலங்கள் அடிப்படையில், ஒன்றுக்கொன்று இணைவுடையதாக அல்லது தொடர்புடையதாகச் செய்யக்கூடிய தரவுத்தளம். எடுத்துக்காட்டு : ஒரு பெயர் மற்றும் முகவரிக் கோப்பில், தெருப்பெயர், நகரின் பெயர், மாநிலத்தின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றுக்கான புலங்களும் அடங்கியிருக்கலாம். ஒவ்வொரு புலத்தையும் நிறைவு செய்து ஒர் ஆள் பற்றிய ஒரு தரவு ஆவணத்தை உரு உருவாக்கலாம்.

read : படித்தல் : ஒரு உட்பாட்டு அல்லது கோப்புச் சேமிப்புச் சாதனத்திலிருந்து தரவுகளைப் பெறுதல். எடுத்துக்காட்டு துளைகளின் தோரணியைக் கண்டறிந்து துளையிட்ட அட்டைகளைப் படித்தல்;காந்தத் தன்மையினை உணர்ந்தறிந்து ஒரு காந்தநாடா வட்டினைப் படித்தல். இது"எழுதுதல்" (write) என்பதிலிருந்து வேறுபட்டது.

read-after-write procedure : படிப்புக்குப் பிறகு எழுதும் நடைமுறை : ஒரு வட்டில் அல்லது நாடாவில் தரவுகளை எழுதுதல், அதனை மீண்டும் படித்தல், துல்லியத்தைப் பதிவு செய்வதற்காக இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தல்.