பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

read notification

1216

read only memory


படும் வாசகக் கோப்பு. அதில், ஆவணமாக்கக் கையேட்டில் அச்சடிக்கப் பட்டிராத கடைசி நேரச்செய்திகள் அல்லது பிழைதிருத்தம் அடங்கியிருக்கும்.

read notification : படித்த அறிவிக்கை : மின்னஞ்சலில் உள்ள ஒரு வசதி. அஞ்சலைப் பெற்றவர் அஞ்சலைப் படித்து விட்டார் என்பதை அஞ்சலை அனுப்பியவருக்கு தெரியப்படுத்தப்படும்.

read only : படிக்க மட்டும் : படிக்க மட்டுமேயான தகவல். திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட கோப்பு அல்லது ஆவணத்தை திரையில் காட்டச்செய்து படிக்க முடியும். நகலெடுக்கலாம். ஆனால் எந்த வகை மாற்றமும் செய்ய முடியாது. படிக்க மட்டும் எனக்குறிக்கப்பட்ட நினைகவகத்தில் (ROM) முக்கிய நிரல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை இயக்கலாம்;ஆனால் மாற்றி யமைக்க முடியாது. படிக்க மட்டும் எனக்குறிக்கப்பட்ட சேமிப்பு ஊடகங்களில் (சிடி ரோம் போன்றவை) பதியப்பட்டுள்ள தகவல்களை பயன் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் புதிய தகவல்களைப் பதிய முடியாது.

read-only attribute : படிப்பதற்கு மட்டுமான பண்பு : ஒரு கோப்பு படிப்பதற்கு மட்டுமேயானது என்பதையும், அது நேரம்வரை திருத்தம் செய்யப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்பதையும் குறிக்கின்ற கோப்புப் பண்பு.

read only memory (ROM) : படிப்பபதற்கு மட்டுமேயான நினைவகம்

(ஆர்ஓஎம்) : படிப்பு நினைவகம் : அடிக்கடிப் பயன்படுத்தப்படும் நிரல்களின் ஒரு தொகுதி நிரந்தரமாகச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தனிவகைக் கணினி நினைவகம். இந்த நினைவகங்களில் சேமித்து வைக்கப்படும் தரவுகள், மின்விசை நிறுத்தப்பட்ட பின்னரும் நீடித்திருக்கும். இவற்றில், ஒரு முறை செயல் முறைகளை உள்ளடக்கி விட்டால், அந்தச் செயல் முறைகளில் மாறுதல் செய்யவோ, தவறுகள் நேர்ந்தால் திருத்தம் செய்யவோ இயலாது. காட்சித்திரை (monitor) வகுத்துத் தொகுப்பி (editor) பயனிட்டுச் செயல்முறைகள் ஆகியவை இந்தவகை நினைவகத்தைக் கொண்டவை. செயல்முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM), அழித்திடத்தக்க செயல்