பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

read only storage

1217

ready made programme


முறை வகுத்திடக்கூடிய படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (EPROM) ஆகியவை இதன் மாறுபட்ட பதிப்புகள்.

read only storage : படிப்புத் தேக்கம்; படிப்புச் சேமிப்பகம்.

readout : படித்துணர்த்தல் : ஒரு கணினி செய்முறைப்படுத்திய தகவல்களைத் தெரிவிக்கும் முறை. எடுத்துக்காட்டு : காட்சி;வரிவாரி அச்சடிப்பி;இலக்க முறை வரைவி.

read rate : படிப்பு விகிதம்.

read relay : படிப்பு அஞ்சல் : ஒரு கம்பிச்சுருள் வழியாகப் பாயும் மின்னோட்டம் ஒருமின் காந்தத்தை உண்டாக்குகிறது என்பதையும், அந்தச் சுருளின் இருமுனைகளும் எதிரெதிர் காந்தத் துருவங்களைக் கொண்டிருக்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சாதனம்.

read, scatter : சிதறல் படிப்பு.

read time : படிப்பு நேரம்.

readlwrite : படிக்க/எழுத : படி/எழுது : சுருக்கமாக ப/எ (RW) எனக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட நினைவகப்பகுதியை அல்லது கோப்பினை அல்லது வட்டினை படிக்கவும் முடியும். மாற்றியமைக்கவும் முடியும்; புதிதாக எழுதவும் முடியும்.

read/write channel : படி/எழுது இணைப்பு அல்லது தடம்.

read/write head : படிப்பு எழுது முனை : ஒரு காந்தச் சேமிப்புச் சாதனத்தில் தரவுகளைப் படிக்க, எழுத அல்லது அழிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய மின்காந்தம். ஒரு வட்டின் அல்லது நாடா இயக்கியின் ஒரு பகுதி யாக அமைந்துள்ள ஒரு மின் எந்திரவியல் அமைப்பு. இது, தரவுகளைச் சேமிப்பு ஊடகத்துக்கு (வட்டு அல்லது நாடா) மாற்றுகிறது. காந்தச் சேமிப்பு ஊடகத்தில் சிறிய காந்த முத்திரைகளை உண்டாக்கி, அடையாளங் காண்பதன் மூலம், இது இவ்வாறு செய்கிறது.

read/write memory : படி/எழுது நினைவகம் : இவ்வகை நினைவகச் சிப்புகளில் பதியப்பட்டுள்ள தரவுவைப் படித்தறியலாம். திருத்தி எழுதலாம். குறை கடத்தி ரேம் சிப்புகள், உள்ளக நினைவகங்கள் (core memory) இவ்வகை படி/எழுதுவகையைச் சார்ந்தவை.

readymade : உடன்பயன்.

readymade packages : உடன் பயன் செயல்முறைத் தொகுதிகள்.

ready made programme : உடன் பயன் செயல்முறைகள்.