பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

recording layout

1224

recording layout


அடர்த்தி : ஒரு நீட்டளவை அல்லது பரப்பளவு அலகில் சேமிப்பதற்கு அடங்கியுள்ள பயனுள்ள சேமிப்பகச் சிற்றங்களின் எண்ணிக்கை. எடுத்துக் காட்டு : ஒரு காந்த நாடாவில் ஓர் அங்குல நீளத்தில் அடங்கியுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை;ஒரு வட்டின் ஒற்றை இடைப்பரப்பில் ஒர் அங்குலத்தில் அடங்கியுள்ள துண்மிகளின் எண்ணிக்கை. பொதுவாகக் காந்தநாடாச் செறிவுத்திறன் அளவுகள் : ஒர் அங்குலத்திற்கு 800, 1600, 6250 (cpi).

recording layout : பதிவு இட அமைப்பு.

recording software suite : ஒலிப்பதிவு மென்பொருள் தொகுப்பு.

record key : ஆவண விடைக் குறிப்பு : ஒர் ஆவணத்திலுள்ள அந்த ஆவணத்தைக் குறிப்பாக அடையாளங் காட்டுவதற்காகவுள்ள ஒரு கட்டுப்பாட்டுப் புலம். கோப்பின் அமைப்புக்காரணி.

record layout : பதிவேட்டு கட்டமைவு : அமைப்பிகளின் வடிவளவு, வரிசைமுறை உட்பட, ஒரு பதிவேட்டில் தரவுக் கூறுகளை வரிசைப்படுத்திக் கட்டமைவு செய்தல்.

record length : பதிவேட்டு நீளம் : ஒரு பதிவேட்டின் வடிவளவின் அளவீடுகள். இவை பொதுவாகச் சொற்கள், எண்மிகள், எழுத்துகள் போன்ற அலகுகளில் குறித்துரைக்கப் பட்டிருக்கும்.

record locking : ஏடு பூட்டல் : பெரும்பாலும் பகிர்ந்தமை தரவுத் தளம் அல்லது பல் பயனாளர் தரவுத் தளங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒர் அட்டவணையிலுள்ள ஓர் ஏட்டில் எழுதுவதைத் தடுப்பதற்கான ஒர் ஏற்பாடு. முதலில் அந்த ஏட்டினை அணுகும் பயனாளர் அதனைப் பூட்டிவிட்டால் வேறு பயனாளர்கள் அணுக முடியாது.

record management : ஏட்டு மேலாண்மை.

record manager : பதிவு மேலாளர்;பதிவு முகமையாளர்;பதிவேட்டு மேலாளர் : 'கோப்பு மேலாளர்' (file manager) என்பதற்கு இன்னொரு சொல்.

record mark : ஆவணக் குறி : ஒர் ஆவணத்தின் முடிவினைக் காட்டப் பயன்படுத்தப்படும் அடையாளக் குறி.

record new macro : புதிய குறுமம் பதிவுசெய்.