பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rectifier

1226

Recycle Bin


rectifier : மின்மாற்றி, திருத்தி : மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுகிற மின்னியல் சாதனம்.

recto : ரெக்டூ, வலப்பக்கம்;ஒற்றைப்படையெண்பக்கம் : ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருக்கும் இரு பக்கங்களில் வலது பக்கத்தைக் குறிக்கும். பெரும்பாலும் பக்க எண் ஒற்றைப் படையெண் கொண்டதாக இருக்கும்.

recurring costs : தொடர் செலவுகள் : அலுவலர் வழங்கீடு, சாதனங்கள் வாடகை, கணினியமைவுடன் தொடர்புடைய அலுவலகச் செலவுகள் போன்ற, ஒரே சமயத்தில் செய்யப்படாத, தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டிய செலவினங்கள்.

recursion : தொடர் செயற்பாடுகள்;மீள்நிகழ்வு;மறு சுழற்சி : செயற்பாடுகளில் அல்லது கட்டளைகளில் ஒன்று, முழுத் தொகுதியின் பெயரில் குறித்துரைக்கப்பட்டுள்ள செயற்பாடுகளின் அல்லது செயல்முறை கட்டளைகளின் தொகுதி. ஒரே செயற்பாடுகளைத் தொடர்ந்து திரும்பத் திரும்பச் செய்தல்.

recursive : தொடர்நிகழ்வான;மறு சுழற்சி : திரும்பத் திரும்ப நிகழ்வதற்கான உள்ளார்ந்த அமைவுடைய ஒரு செய்முறை. ஒவ்வொரு மறுநிகழ்வும், முந்திய மறுநிகழ்வின் விளைவினைப் பொறுத்து அமையும்.

'recursive procedure : தொடர் நிகழ்வு மறுசுழற்சி முறை : 'A என்ற நடைமுறை தன்னை நிறைவேற்றும்போது தன்னையே அல்லது Bஎன்ற மற்றொரு நடைமுறையை அழைத்தல்;அந்த 'B' நடைமுறை, 'A' நடை முறையை அழைத்தல்.

recursive subroutine : தொடர் நிகழ்வுத் துணைவாலாயம்;மறு சுழற்சி துணை வாலாயம் : தன்னையே அழைக்கிற அல்லது மற்றொரு துணை வாலாயத்தை அழைக்கிற துணை வாலாயம். இரண்டாவது துணைவாலாயம், முதல் துணை வாலாயத்தை அழைக்கும்.

recycle : மறுசுழற்சி;மீள்சுழற்ச முறை.

Recycle Bin : மீட்சித் தொட்டி;ரீசைக்கிள் பின் : விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்ட்டோஸின் முகப்புத் திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத்துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில், அதனை சுட்டி மூலம் இழுத்துக்