பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reference1

1230

referential integrity


reference1 : குறிப்பி1 : சி++ நிரலாக்க மொழியில் ஒரு தரவு இனம். குறிப்பியை அறிவிக்கும் போதே அதில் ஒரு மாறிலியின் மூலம் தொடக்கமதிப்பிருத்த வேண்டியது கட்டாயம். அந்த மாறிலியின் மாற்றுப் பெயராக அக்குறிப்பி செயல்படும். அதாவது மாறிலிக்குப் பதிலாகக் குறிப்பியையே பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு. int n = 25. int& r = n) n என்பது int என்னும் தரவினத்தில் ஒரு மாறிலி. r என்பது n -ஐக் குறிக்க உருவாக்கப்பட்டுள்ள குறிப்பி. cout <<r என்று கட்டளை அமைத்தால் 25 என (n-ன் மதிப்பு) காட்டும். n-ன் மாற்றுப் பெயர் போல செயல்படும். 2. # ஜாவா, சி மொழிகளில் ஒர் இனக் குழுவில் (Class) உருவாக்கப்படும் இனப் பொருளை (Object) குறிப்பதற்குப் பயன்படும் மாறிலி (Variable). குறிப்பி, அடுக்கை நினைவகத்திலும், இனப்பொருள், குவியல் (Heap) நினைவகத்திலும் உருவாக்கப்படுகிறது. சி மொழியிலுள்ள கட்டுக்கு (Pointer) இணையற்றது.

reference2 : குறிப்பு : ஒரு கோவையில் (Array) உள்ள உறுப்பு அல்லது ஒர் ஏட்டிலுள்ள ஒரு புலம் போன்ற ஏதேனும் ஒரு மாறிலியை அணுகுவதற்குப் பயன்படுவது.

reference address : மேற்கோள் முகவரி;குறிப்பு முகவரி.

reference beam : ஆய்வுக் கற்றை

reference. COM : ரெஃபரன்ஸ். காம் : இணையத்திலுள்ள தேடு பொறி, 1, 50, 000க்கு மேற்பட்ட யூஸ்நெட் செய்திக் குழுக்கள், அஞ்சல் பட்டியல்கள், வலை மன்றங்கள் ஆகியவற்றின் முகவரிகளைச் சேமித்து வைத்துள்ள தளம். முகவரி : www. reference. com.

reference edge : பொருந்து முனை.

reference parameter : குறிப்பு அளபுரு : ஒரு துணை நிரல் கூறினை (sub-routine) அல்லது ஒரு செயற்கூறினை (function) அழைக்கும்போது ஒரு மாறியின் வெளிப்படையான மதிப்பினை அளபுருவாக அனுப்பி வைப்பதற்குப் பதிலாக மாறிலியின் முகவரியை அளபுருவாக அனுப்பிவைத்தல்.

reference type : குறிப்பு இனம்.

reference variables : பொருந்து மாறிலிகள்;குறிப்பு மாறிலிகள்.

referential integrity : சுட்டுமுறை முழுமையாக்கம் : தொடர்புறு தரவுத் தள மேலாண்மையில், ஒவ்வொரு அயல்விடைக் குறிப்பு ஒரு அடிப்படை விடைக் குறிப்பினைக் கொண்டிருக்கும் வகையில் உள்முகமாக அமைந்த பாதுகாப்பு.