பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

refrigerator

1234

register, console display


கலைகளில், திரையில் ஒர் உருக்காட்சியை மறுவரைவு அல்லது காட்சியாகக் காட்ட அது எடுத்துக்கொள்ளும் நேரம்.

refrigerator : குளிர்பதனப் பெட்டி.

regenerate : மறு உருவாக்கம் : சேமிப்புச் சாதனங்களில், அழித்திடும் முறையில் பயன்படுத்தப் பட்டுள்ள தகவல்களை மறுபடியும் எழுதுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு எண்ணளவினைப் புதுப்பித்தல்.

regenerator : புத்துயிரூட்டு அமைவு : செய்தித் தொடர்புகளில் மறுஉருவாக்கி போன்றது. மின்னணுவியலில் ஒரு நினைவகத்துக்கு அல்லது காட்சிச் சாதனத்துக்கு, அது தனது மின்னேற்றத்தை இழக்கும் போதெல்லாம் மீண்டம் மீண்டும் மின்விசை வழங்குகிற ஒரு மின்சுற்று வழி.

region : வட்டாரம் : மண்டலம் : மாறுபடலாகும் எண்ணிக்கையிலான பணிகளைக் கொண்ட பன்முகச் செயல்முறைப் படுத்தலில், ஒதுக்கப்பட்டுள்ள உள்முகச் சேமிப்பு இடப் பரப்பினைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

regional communities : வட்டாரச் சமூகக் குழுக்கள்.

regional settings : வட்டார அமைப்புகள்.

region fill : பரப்பை நிரப்பல் : கணினி வரைகலையில், திரையில் உருவாக்கப்பட்ட ஒரு வரையறுத்த பரப்பை (வட்டம், சதுரம், செவ்வகம் போன்றவை) தேர்ந்தெடுத்த நிறம், தோரணி அல்லது பிற பண்புக்கூறுகளால் நிரப்பும் நுட்பம்.

register (R) : பதிப்பி;பதிவு ஏடு;பதிகம்;பதிவிடம் : சிறிதளவிலான தரவுகளை அல்லது செய்முறைப்படுத்தும்போது இடைவிளைவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக ஒரு மையச்செயலகத்தில் பயன்படுத்தப்படும் உயர்வேகச் சாதனம்.

register, access control : அணுகுக் கட்டுப்பாட்டுப்பதிவகம்.

register, address : முகவரிப் பதிவகம்.

register, arithmetic : கணக்கீட்டுப் பதிவகம்.

register, check : சரிபார்ப்புப் பதிவகம்.

register, circulating : சுற்றுப் பதிவகம்.

register, console display : பணியகக் காட்சிப் பதிவகம்.