பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

register, current

1235

registry


register, current instruction : நடப்பு நிரல் பதிவகம்.

register, error : பிழைப் பதிவகம்.

register, index : சுட்டுவரிசைப் பதிவகம்.

register level compatibility : பதிவு நிலை ஒத்தியல்பு : மற்றொரு சாதனத்துடன் 100% ஒத்தியல்பாகவுள்ள வன்பொருள் அமைப்பி. இது ஒரே வகையான வடிவளவும், பெயர்களும் உடைய பதிவேடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது.

register, shift : பெயர்வுப் பதிவகம்.

register, storage : சேமிப்புப் பதிவகம்.

registration : பதிவு செய்தல் : ஒரு சுட்டுக் குறிப்பினைப் பொறுத்துத் துல்லியமாக இட அமைவு செய்தல்.

registration mark : பதிவுக்குறி : அச்சுத்தகடுகள் எடுக்கப்படும் படச் சுருள்களில் சரிநிகரான இடங்களில் அச்சிடப்படும் ஒரு குறி. வணிகமுறை அச்சடிப் பாளர்கள் தங்கள் அச்சு எந்திரங்களின் சிறந்த தரத்தைப் பேணு வதற்காக இந்தக் குறிகளைப் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு வண்ணங்களைத் துல்லியமாக அச்சிடுவதற்கு இது பயன்படுகிறது.

registry : பதிவேடு;பதிவகம் : விண்டோஸ் 95/98/ என்டீ இயக்க முறைமைகளில் பயன்படுத்தப்படும் மையப்படி நிலை தரவுத்தளம். ஒன்று அல்லது மேற்பட்ட பயனாளர்கள், பயன்பாடுகள், வன்பொருள் சாதனங்களுக்காக கணினியை தகவமைக்கத் தேவையான தகவல்களைச் சேமித்து வைக்க இது பயன்படுத்தப்படுகிறது. கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, கோப்புறை மற்றும் சின்னங்களின் பண்புகளில்,

கணினியில் இணைக்கப்பட்ட வன்பொருள்களில், பயனாளர்களின் விருப்பத்தேர்வுகளில், நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகளின் தகவமைவுகளில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. விண்டோஸ் 3. x-இல் இருந்த . INI கோப்புக்கும், எம்எஸ் டாஸில் இருந்த autoехес. bat, config. sys கோப்புகளுக்கும் மாற்றாக இது விளங்குகிறது. விண்டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி பதிவேடுகள் ஒன்றுபோல இருந்தாலும் வட்டில் பதியப்பட்டுள்ள முறையில் வேறுபடுகின்றன.