பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relational algebra

1237

relationai model


இணைவன/படிமுறை உரு மாதிரியில், இனங்களின் தொகுதிகளிடையே பெயர் குறித்திட்ட தொடர்புநிலை.

relational algebra : உறவுநிலை இயற்கணிதம் : தரவுத்தளங்களில் உள்ள அட்டவணைகளைக் கையாள்வதற்கான விதி முறைகள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பு. கீழ்க்காணும் செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது select, project, product, union, intersect, difference, join (or inner join), divide. உறவுநிலைத் தரவுத் தளங்களில், ஏற்கெனவே இருக்கும் அட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க உறவுநிலை இயற்கணிதம் பயன்படுத்தப்படுகிறது.

relational calculus : உறவுநிலை நுண்கணிதம் : தரவுத் தள மேலாண்மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல் முறைசாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு. : 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு நுண்கணிதங்களும் தமக்குள்ளே ஒரே மாதிரியானவை. உறவு நிலை இயற் கணிதத்துடன் உடன்பாடுகொண்டவை. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, இருக்கின்றஅட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க முடியும்.

relational database : தொடர்புறு தரவுத் தளம்.

relational data structure : தொடர்புறு தரவுக்கட்டமைவு : தரவுத் தளத்தினுள் தரவுக் கூறுகள் அனைத்தும் எளிய அட்டவணைகளின் வடிவத்தில் சேமிக்கப்படுவதாகக் காட்டும் ஒரு தருக்கமுறைத் தரவுக் கட்டமைவு. தொடர்புறு மாதிரியில் அமைந்தDBMSதொகுதிகள் பொதுவான தரவுக்கூறுகளைக் கொண்ட பல்வேறு அட்டவணைகளிலிருந்து தரவு அம்சங்களை இணைக்க வல்லவை.

relational expression : தொடர்பு நிலைக் கோவை : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கங்களைக் கொண்ட கோவை.

relational model : உறவுநிலை மாதிரியம் : தரவுகளை அட்ட வணைகளில் சேமித்து வைக்கும் ஒரு தரவுத்தள மாதிரியம்.

அட்டவணையை (table), உறவு (relation) என்று அழைப்பதுண்டு. தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தரவுத்தள மேலாண்மை அமைப்புகளில் இந்த வகை மாதிரியமே பின்பற்றப்படுகிறது.