பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

backbone cabal

123

backfilling


யத்தில் பாட்டை (Bus) என்பது முதுகெலும்பாக விளங்கும்.

backbone cabal : முது கெலும்புமறை குழு : இணையத்தில் யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படி நிலை அமைப்பை அறிவித்தல் மற்றும் புதிய செய்திக் குழுக்களை உருவாக்கல் ஆகிய வற்றுக்கு பொறுப்பான பிணைய நிர்வாகிகளின் குழுவைக் குறிக்கும் சொல். இப்போது அத் தகைய மறைகுழுக்கள் இல்லை.

back door : பின்வாசல் : பின் கதவு : ஒரு நிரல் அல்லது முறைமையின் பாதுகாப்புக் கட்டுப் பாடுகளை மீறி உள்ளே நுழையும் வழி. நிரலாக்க வல்லுநர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மென்பொருள்களில், பிழை களைக் கண்டறியும் நோக்கில் இத்தகைய பின்வாசல்களை அமைப்பர். பின்வாசல் வசதி நிரலர் தவிர ஏனையோர்க்கு தெரிந்துவிட்டாலோ, மென் பொருள் வெளியிடப்படுவதற்கு முன்பு அத்தகைய பின் வாசல் வசதிகள் நீக்கப்படாவிட்டாலோ (கவனக் குறைவாக), பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடும்.

backdrop : பின்னணி : பின்னணித் தோற்றம். சிடி ஐ-யில் மற்ற தோற்றங்கள் தெளிவாகத் தெரியும்போது பின்னணி தோற்றப் பகுதியும் முழுவதும்தெரியும்.

back end : பின்னிலை : பின்னணி; பின்அமைவு : 1. கிளையன்/வழங்கன் (Client/Server) பயன்பாடுகளில், வழங்கு கணினியில் செயல்படும் நிரலின் பகுதி. (Client/Server Architecture, Front End என்பதனுடன் ஒப்பிடுக). 2. மொழிமாற்றி (compiler) யின் ஒரு பகுதி. மனிதர்களுக்குப் புரிகிற மூல நிரல் வரைவை (source code), எந்திரத்துக்குப் புரிகிற குறிநோக்கு வரைவாக (object code) மாற்றியமைக்கும் பகுதி.

back-end case : பின்முனை எழுத்து : நிரல் குறியீடுகளை உருவாக்கும் எழுத்துக் கருவிகள்.

back end operation : பின் முனைப் பகுதிகள்; பின்னிலைப் பணிகள்; பின் இயக்கப் பணிகள்.

back-end processor : பின் நிலைச்செயல் : தரவுத் தள எந்திரம் (Data base machine) போன்றது. மையச் செயலகத்திற்கும் நேரடி அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளங்களுக்கும் இடை முகமாகப் பணியாற்றும் கணினி.

backfilling : பின்புற நிரப்புதல் : 8086 /88 மற்றும் 286 பி. சி. க்களின்