பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

remark Statement

1242

remote console


படும் வாய்மொழிச் செய்திகள். இது உள்முக ஆவணமாக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

remark statement : குறிப்புரை அறிக்கை.

remedial maintenance : பரிகாரப் பராமரிப்பு : பொருளின் தவறான செயற்பணியினால் தேவைப்படும் பழுதுபார்க்கும் பணி. இது தடுப்புப் பராமரிப்பு' (Preventive maintenance) என்பதிலிருந்து மாறுபட்டது.

reminder : நினைவூட்டி.

remote : சேய்மை;தொலைவு;தொலைவிடம் : ஒரு முனையம் அல்லது அச்சடிப்பி போன்ற ஓர் அணுக்கக் கணினியிலிருந்து மிகத்தொலைவு.

remote aCCeSS : சேய்மை அணுகல்;தொலை அணுகல் : கணினியிலிருந்து தொலைவிலுள்ள ஒரு நிலையம் அல்லது நிலையங்கள் மூலம் ஒரு கணினி வசதியுடன் செய்தித் தொடர்பு கொள்ளுதல்.

remote access server : சேய்மை அணுகு வழங்கன் : ஒரு குறும்பரப்புப் பிணையத்திலுள்ள புரவன் கணினி. இணக்கிகள் பிணைக்கப்பட்டிருக்கும். அதன் வழியாக தொலைதூரப் பயனாளர்கள் தொலைபேசி வழியாக பிணையத்தில் நுழைய முடியும்.

remote administration : சேய்மை நிர்வாகம் : ஒரு பிணையத்தின் நிர்வாகம் தொடர்பான பணிகளை வழங்கன் கணினியிலிருந்து செய்யாமல் பிணையத்திலுள்ள வேறொரு கணினியிலிருந்து மேற்கொள்ளும் நடைமுறை.

remote batch processing : சேய்மைத் தொகுதி செயலாக்கம் : ஒரு சேய்மை அமைவிடத்தில், சிறிய கணினியமைவினைப் பயன்படுத்தி, தரவுகளை அடுக்கு அடுக்காகச் செய்முறைப் படுத்துதல்.

remote communications : சேய்மை தகவல் தொடர்பு : தொலைபேசி இணைப்பு அல்லது பிற தகவல் தொடர்பு இணைப்பு வழியாக தொலை விலுள்ள கணினியுடன் தகவல் பரிமாற்றம் செய்தல்.

remote computing services : சேய்மைக் கணிப்புச் சேவை : வாடிக்கையாளர்களுக்கு பணி மையங்கள் அளிக்கும் பணிகள். எடுத்துக்காட்டு : அடுக்குச் செய்முறைப்படுத்தல்;பரிமாற்றச் சிக்கல் தீர்வு (Interactive problem solving) ;ஆலோசனை (consulting).

remote computer, terminal : சேய்மை கணினி முனையம்.

remote console : சேய்மைப் பணியகம்.