பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

remote control software

1243

remote procedure call


remote control software : சேய்மைக் கட்டுப்பாட்டு மென் பொருள் : ஒரு கணினியைப் பயன்படுத்துபவர் இன்னொரு இடத்திலுள்ள ஒரு கணினி யுடன், அந்தச் சேய்மைக் கணினி உள்முகப் பொறியாக இருப்பதுபோன்றே, தொடர்பு கொள்வதற்கு அனுமதிக்கிற மென்பொருள். செயல்முறையின் ஒரு பகுதி உள்பொறி யிலும், மற்றொரு பகுதி சேய்மைப் பொறியிலும் அமைந் திருக்கும். இது பொதுவாக, பயனாளருக்கு உதவி புரிவதற்காகத் தொழில் நுட்பாளர்களினால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சேய்மைப் பொறியில் ஒரு செயற்பணியை நிறைவேற்றுவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

Remote Data Objects : சேய்மை தரவுப் பொருள்கள் (ஆர்டிஒ) : விசுவல் பேசிக் 4. 0 தொழிலகப் பதிப்பில் சேர்க்கப்பட்ட, பொருள்நோக்கிலான தரவுத் தள அணுகு கருவி. இதற்கென தனித்த கோப்பு வடிவாக்கம் எதுவும் இல்லை. ஆர்டிஒ-க் களை அண்மைக்கால ஒடிபிசி (ODBC-Open Data Base Connectivity) தரவரையறைக்கு உட்படும் தரவுத் தளங்களுக்காகப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஆர்டிஒ-க்களின் செயல்வேகமும், குறைவான நிரல் வரிகள் மூலம் நிறைவான செயல்கள் ஆற்ற முடிவதும் இவை நிரலர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெறக் காரணமாயிருந்தன.

remote job entry : சேய்மை பணிப் பதிவு : சேய்மை முனை யங்களிலிருந்து, செய்முறைப் படுத்தும் பணிகளை வழங்கப் பயன்படுத்தப்படும் கணினிச் செயல்முறை.

remote job service : சேய்மைப் பணிச் சேவை.

remote logging : சேய்மைப் பதிகை.

remote login : சேய்மை புகு பதிகை : தரவுத் தொடர்பு இணைப்பு (தொலைபேசி போன்றவை) வழியாக தொலைவிலுள்ள ஒரு கணினி அமைப்பில் நுழைதலைக் குறிக்கும். புகுபதிவுக்குப்பின் பயனாளரின் கணினி, தொலைதூரக் கணினியின் ஒரு முனையமாகச் செயல்படும். இணையத்தில் சேய்மை புகுபதிகைக் டெல்நெட் என்னும் நிரல் மூலமாக நடைபெறுகிறது.

remote phone : சேய்மைப் பேசி.

remote procedure call : சேய்மைமைச் செயல்முறை அழைப்பு : ஒரு நிரலிலிருந்து நிரலுக்கு