பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

remote processing

1244

removable media


வெளியே வரையறுக்கப்பட்டுள்ள ஒரு செயல்முறையை அல்லது வேறொரு நிரலை அழைக்க முடியும். அந்த வேறொரு செயல்முறை அல்லது நிரல், தனக்கிடப்பட்ட பணியை முடித்து, கிடைக்கப் பெறும் விடையை அழைத்த நிரலுக்கு அனுப்பி வைக்கும். அழைக்கப்படும் செயல்முறை அல்லது நிரல் தொலைதூரக் கணினியில் இருக்குமெனில் அதனை"சேய்மைச் செயல் முறை அழைப்பு"என்கிறோம்.

remote processing : சேய்மைச் செயலாக்கம் : ஒரு கணிணியமைவுடன் சேய்மையில் இணைக்கப்பட்டுள்ள ஒர் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனத்தின் வாயிலாகக் கணினிச் செயல்முறையைச் செய்முறைப் படுத்துதல்.

remote processor : சேய்மை நிலைச் செயலி.

remote site : சேய்மை வரையிடம் : பகிர்மானக் கணிணி இணையத்திலுள்ள புறத்தொலைவிடம்.

remote station : சேய்மை நிலையம்.

remote system : சேய்மைக் கணினி அமைப்பு : ஒர் இணக்கி/தொலைபேசி ஆகியவற்றின் மூலம் பயனாளர் அணுகக்கூடிய கணினி அல்லது கணினிப் பிணையம்.

remote terminal : சேய்மை முனையம் : தொலைவிலுள்ள கணினியிலிருந்து தனியாகப் பிரிந்துள்ள வரையிடங்களிலிருந்து ஒரு கணினியுடன் செய்தித்தொடர்பு கொள்வதற்கான சாதனம். இதற்கு, தொலைபேசிக் கம்பிகள் போன்ற செய்தித்தொடர்பு வசதிகள், நேரடிக் கம்பி வடங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

removable disk : அகற்றத்தக்க வட்டு : அதனதன் வட்டு இயக்கியில், படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும் செருகக் கூடிய வட்டு அலகு. இதனைத் தேவையில்லாதபோது அகற்றி விடலாம். நெகிழ்வட்டுகள், வட்டுப் பொதியுறைகள் போன்றவை அகற்றத்தக்க வட்டுச் சாதனங்களாகும்.

removable mass storage : அகற்று மொத்தச் சேமிப்பகம்.

removable media : அகற்றத்தக்க ஊடகம் : தரவுகளைப் படிக்கிற அல்லது தரவுகளை எழுதுகிற சாதனத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடிய நிலைவட்டு உறைகள் அல்லது பேழைகள்.