பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

remove

1245

repeat counter


remove : அகற்று;நீக்கு.

remove all : அனைத்தும் அகற்று.

remove all arrows : அனைத்து அம்புக்குறிகள் நீக்கு.எம்எஸ் எக்செஸில் உள்ள ஒரு கட்டளை.

remove filter : வடிகட்டி அகற்றுன.எம்எஸ் அக்செஸில் உள்ள ஒரு கட்டளை.

rename : பெயர்மாற்று;மாற்று பெயர் : பெரும்பாலான கோப்பு முறைமைகளில் ஒரு கோப்புக்கு மாற்றுப் பெயர் கொடுப்பதற்கான கட்டளை.

rename column : நெடுங்கைப் பெயர் மாற்று.

render : வரைதல் : ஒர் இயல்புலகப் பொருளை அதன் உள்ளபடியான தோற்றத்தில் வரைதல்.

rendering : வரைவு;கணினி வரைகலையில் முப்பரிமாண உருக்காட்சியை உருவாக்குதல். இதில், நிழல்கள், பிரதிபலிப்புகள் போன்ற ஒளி வளைவுத் துண்டுதல்கள் உள்ளடங்கியிருக்கும்.

reorder point : கையிருப்பு அளவு : ஒர் இனத்திற்கும் கூடுதலாக அனுப்பாணை அனுப்புவதற்கு முன்பு கைவசமுள்ள மிகக்குறைந்த கையிருப்பு அளவு. பட்டியல் கட்டுப்பாட் டில் இன்றியமையாத அம்சம்.

reorganize : மீள் ஒழுங்காமை.

repagination : மறுபக்கமிடுதல் : ஒரு பலபக்க ஆவணத்தில் திருத்தம் செய்யும்போது, ஒரே சீரான பக்க நீளமும், தோற்றமும் ஏற்படும் வகையில் ஒரு சொல்செயலி மூலம் சரியமைவு செய்யும் செய்முறை.

repaint : மறுவரைவு : நாளது தேதி வரையிலான வரைகலை அல்லது வாசகத் தரவுகளைப் பிரபலிக்கும் வகையில் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒர் உருக் காட்சியை மறுபடியும் வரைந்து காட்டுதல். இது பல்வேறு வரைகலைப் பொறியமைவுகளில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இது, காட்சித் திரையில் காட்டப்படும் வடிவமைப்பை தானாகவே மறுவரைவு செய்கிறது.

repeat : திரும்பச்செய் : சற்று முன் செய்த பணியை மீண்டும் செய்விக்கப் பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களில் உள்ள கட்டளை.

repeat counter : பன்முறைப் பதிவுச் சாதனம் : ஒரு செயல் முறையில் ஒரு நிகழ்வு எத்தனை முறை நிகழ்கிறது என்பதைப் பதிவு செய்யும் செயல் முறைப் பதிவுச் சாதனம். இது பின்னர் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பயன்படுகிறது.