பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

repeater

1246

replace


repeater : மறுவுருவாக்கி : செய்தித் தொடர்புகளில் அனுப்பீட்டுத் தொலைவினை நீட்டிப்பதற்காக தகவல் சைகைகளைப் பெரிதாக்குகிற அல்லது மறு உருவாக்கம் செய்கிற ஒரு சாதனம்.

repeating decimal number : பன் முறை பதின்ம இலக்கம் : முடிவுறாமல் திரும்பத் திரும்ப வரும் பதின்ம எண். எடுத்துக் காட்டு : . 3333333.... அல்லது . 31282828.....

repeating number : பன்முறை எண்.

repeat key : பன்முறை விசைப் பலகை : மீண்டும் அழுத்தாமல் திரும்பத் திரும்பத் தொடர்பு ஏற்படும் வகையில் அழுத்தி வைத்திருக்கக்கூடிய விசைப் பலகையின் விரற்கட்டை.

repetition : மறுநிலை நிரல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல்களை குறிப்பிட்ட தடவைகள் நிறைவேற்றும்படி செய்கிற நிரல்.

repetition instruction : திரும்பச் செய்நிரல்.

repetitive strain injury : தொடர்பணி மிகையுழைப்பு ஊறு : கணினி விசைப்பலகையில் தொடர்ந்து பணிபுரிவதால், கணினித் திரையைத் தொடர்ந்து உற்றுநோக்குவதால் சிலவகை நோய்கள் வர வாய்ப்புண்டு. மணிக்கட்டுக்கு துன்பம் நேராவண்ணம் விசைப்பலகை அமைப்பு இருக்க வேண்டும். கண்ணுக்கு அவ்வப்போது ஒய்வு தரவேண்டும். கண்கண்ணாடி அல்லது திரைக்குக் கூசொளி வடிகட்டி போன்றவை பயன்படுத்த வேண்டும்.

reperforater : மறுதுளையிடு கருவி : காகித நாடாத்துளை.

repertoire : அறிவுறுத்தத் தொகுதி : ஒரு குறிப்பிட்ட கணினிக்கு அல்லது கணினி குடும்பத்திற்குச் சொந்தமான நிரல்களின் முழுத் தொகுதி. இதனை நிரல் தொகுதி என்றும் கூறுவர்.

replace : பதிலீடு;மாற்றீடு : ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன்றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்ற வேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றியமைப்பர். பெரும்பாலான சொல்செயலித் தொகுப்புகளில் குறிப்பிட்ட சொல்லை/சொல்தொடரைக் கண்டறிந்து புதியதென்றால் மாற்றியமைக்கும்"கண்டறிந்து மாற்று" (Find and Replace)