பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

report layout

1248

reprogramming


தரவுவை ஒரு அச்சிட்ட அறிக்கையாக மாற்றக்கூடிய செயல்முறை. தரவுத் தள மேலாண்மைப் பொறியமைவுத் தொகுதிகளின் ஒர் அம்சம். இது, ஒரு இறுதிப் பயனாளர், ஒரு தரவுத் தளத்திலிருந்து மீட்கப்பட்ட தரவுகளைக் காட்சியாகக் காட்டுவதற்காக ஒர் அறிக்கை உருவமைவை உடனடியாகக் குறிப்பிடுவதற்கு அனுமதிக்கிறது.

report layout : அறிக்கை உருவரை.

report manager : அறிக்கை மேலாளர்.

reports : அறிக்கைகள்.

report writer : அறிக்கை எழுது கருவி : தரவுக் கோப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து செந்திறமான, வளமை அறிக்கைகளை உருவாக்கும் பயன்பாட்டுச் செயல்முறை.

repository : தொகுபதிவகம் : 1. ஒரு கணிப்பணி அமைப்பைப் பற்றிய அனைத்துத் தகவல் களின் தொகுப்பு. 2. ஒரு தரவுத் தளத்தின் தரவு அகராதியை உட்பொதியாய்க் கொண்டுள்ள மேற்பொதி.

representation : உருவகிப்பு.

representation, binary : இரும உருவகிப்பு.

representation, binary coded decimal : இருமக் குறிமுறை பதின்ம் உருவகிப்பு.

representation, data : தரவு உருவகிப்பு.

representation, fixcal pont : நிலைப்புள்ளி உருவகிப்பு.

representation, floating point : மிதவைப் புள்ளி உருவகிப்பு.

representation, number : எண் உருவகிப்பு.

reproduce : படிப்பெருக்கம் : ஒரே மாதிரியான ஊடகத்திலிருந்து தரவுகளின் பல படிகளை எடுத்தல். எடுத்துக்காட்டு : ஒரு குறிப்பிட்ட வட்டுத் தொகுதியிலிருந்து ஒர் இரட்டைப்படி வட்டுத் தொகுதியைப் பெறுதல்.

reproducing punch : படிப் பெருக்கத் துளையிடு கருவி : அட்டைகளின் அடுக்குகளை இரட்டைப் படியெடுப்பதற்கான சாதனம். ஒரு தலைமை அடுக்கின் துல்லியமான படியை அளிக்கவல்லது. அடுக்கின் ஒரு படியினை வேறுபட்ட வடிவமைப்பில் துளையிடவும் செய்யலாம்.

reprogramming : மறு செயல் முறைப்படுத்துதல் : ஒரு கணினிக்காக எழுதப்பட்ட ஒரு