பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

background

124

background programme


வழக்கமான நினைவகத்திற்குப் பதிலாக இஎம்எஸ் நினைவ கத்தை ஒதுக்குவது. மூல தாய்ப் பலகை அட்டை சிப்புகள் செயலிழக்கின்றன. இஎம்எஸ் சிப்புகளுக்குக் கீழ் நினைவு முகவரிகள் இடப்படுகின்றன. பின்புற நிரப்புதலின் மூலம் டெஸ்க்வியூ போன்ற பல்பணி நிரல்கள் இயங்கவும், விரிவாக்கப்பட்ட நினைவகத்தில் ஒரே நேரத்தில் கூடுதல் நிரல்களை அமைக்கவும் முடியும்.

background:பின்புலம்;பின்னணி:1. பன்முகக் கட்டளையிடலில் குறைந்த முன்னுரிமையுள்ள நிரல் செயல்படுத்தும் சூழல். 2. காட்சித் திரையில் காட்டப்பட உருக்களோ வரை பட முன்புலங்களோ இல்லாத திரைப்பகுதி.

background application:பின் புலப் பயன்பாடு.

background colour:பின்னணி வண்ணம்;பின்புல நிறம்: காட்சித்திரையின் பின்னணி நிறம். காட்சித் திரைதுடைக்கப்பட்ட பிறகு ய்ந்த நிறத்துக்குத் திரை திரும்பும்.

background communication:பின்புலத் தகவல் தொடர்பு

background job:பின்புலப் பணி.

background ink:பின்புல மை:அதிகம் பிரதிபலிக்கும் மை. வருடுபொறி கண்டுபிடிக்க முடியாத வகையில் படிவத்தின் பகுதிகளை இது அச்சிடும்.

background noise:பின்னணிண்இரைச்சல்:கம்பியிலோ,வழித் தடத்திலோ அல்லது மின்சுற்றிலோ வந்துசேரும் தொடர்பில்லாத, தேவையற்ற சமிக்கைகள்.

background operation:பின் புல இயக்கம்:ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு நிரலை மொழிமாற்றும் பணியைச் செய்யும்போது,அச்சுப்பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கீடுகளைப் (Interrupt)பயன்படுத்தி பின்னணி இயக்கம் நடைபெறலாம்.

background printing:பின்புல அச்சிடல்;பின்னணி அச்சிடு முறை:ஒர் ஆவணத்தை அச்சிட அச்சுப்பொறிக்கு அனுப்பி விட்டு கணினியில் வேறுபணிகளை மேற்கொள்ளும் முறை.

background processing:பின்னணி செயலாக்கம்:முன்புலத்தில் ஒரு நிரல் செயல்படும் போது பின்னணியில் அதே நேரத்தில் வேறொரு நிரல் இயக்கப்படுவது.

background programme:பின்புல நிரல்:பல நிரல்களை ஒரே சமயத்தில் செயல்படுத்தும்