பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1250


அல்லது அதன் ஒரு பகுதியை மீண்டும் ஒட்டுதல். இது, பொதுவாக ஒரு திருத்தம் செய்வதற்காக, அல்லது ஒரு தவறான தொடக்கத்தின்போது அல்லது தடங்கலின்போது செய்யப்படுகிறது.

Research Libraries Information Network : ஆராய்ச்சி நூலகத் தகவல் பிணையம் : ஆராய்ச்சி நூலகங்களின் குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய, இணைய நிகழ்நிலைத் தொகுப்பு. பெரும்பாலும் அமெரிக்க நாட்டிலுள்ள மிகப்பெரும் ஆராய்ச்சி நூலகங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.

research network : ஆய்வுப் பிணையம்.

reserve : ஒதுக்கு ஒதுக்கீடு : ஒரு குறிப்பிட்ட புறச்சாதனத்தின் செயல்படு பரப்புக்கென தொடர்ச்சியான வட்டுப் பகுதியை ஒதுக்கீடு செய்வதற்கான கட்டளை. இலக்கமுறை ஒளிக்காட்சிச் சாதனங்கள் இக்கட்டளையைப் புரிந்து கொள்கின்றன.

reserve accumulator : காப்புத் தொகுப்பி : ஒரு மையச் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள துணை சேமிப்புப் பதிவேடு.

reserved character : ஒதுக்கப்பட்ட குறியீடு;சிறப்புக் குறியீடு : விசைப்பலகையிலுள்ள சில குறியீடுகளுக்கு நிரல்களில் சிறப்புப் பொருள் உள்ளன. எனவே, அவற்றைக் கோப்பு, ஆவணம், பயனாளர் உருவாக்கும் ஏனைய செயல்கூறுகள், குறுமம் (Macro) ஆகியவற்றின் பெயர்களில் அக்குறியீடுகளைப் பயன்படுத்த முடியாது. பொதுவாக, நட்சத்திரக் குறி (*), முன்சாய்வு (/), பின்சாய்வு (\), வினாக்குறி (?), செங்குத்துக் கோடு (|) ஆகியவை ஒதுக்கப்பட்ட குறியீடுகளில் அடக்கம்.

reserved words : காப்புச் சொற்கள்;சிறப்புச் சொற்கள் : செயற்பாட்டுப் பொறியமைவுகள், மொழி பெயர்ப்பிகள் போன்றவற்றால் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்காகச் சில சொற்கள் காப்பிடப்பட்டிருக்கும்;இச்சொற்களைப் பயன் பாடுகளிலும், செயல்முறைகளிலும் பயன்படுத்த முடியாது. இவை கணினிச் செயல்முறைப்படுத்தும் மொழிகளில் தனிப்பொருளை உடையவை எடுத்துக்காட்டு : Read, FOR, LET, IF, GOTO, LPRINT.

reset (R) : மாற்றமைவு : திரும்ப அமைதல் : 1. கணினி அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட அசை