பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

resilient

1252

resolve


resilient : விரிவாற்றல் : பழுதுபட்ட பின்னரும் தொடர்ந்து நிறைவேற்றும் திறனுடைய ஒரு பொறியமைவு.

resistance : தடை;மின்தடை, மின்தடுப்பி : மின்னோட்டத்தை தடுக்கும் திறன். மீக்கடத்திகளைத் தவிர பிற மின் கடத்திகளில் குறைந்த அளவோ, அதிக அளவோ மின்தடைப் பண்புள்ளது. குறைநத மின் தடையுள்ள உலோகங்கள் மின் கடத்தும் திறன்மிக்கவையாய் உள்ளன. எனவே இவை கடத்திகள் (conductors) என அழைக்கப்படுகின்றன. கண்ணாடி, ரப்பர் போன்றவை அதிக மின்தடை உள்ளவை. இவை மிகக்குறைவான மின்சாரத்தைக் கடத்துகின்றன. எனவே இவை கடத்தாப் பொருள்கள் (Non-conductors) எனவும் (Insulators) விலக்கிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

resistor : தடுப்பான்;தடுப்பி;மின்தடை : ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின்னோட்டப் பாய்வினைத் தடுக்கும்போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது.

resizing : வடிவ மாற்றம், அளவு மாற்றம்;மறுவடிவாக்கம் : முன் தீர்மானித்த நிலையளவுருக் களுக்கிணங்க ஒரு உட்பொருளினை அளவிடும் செய்முறை.

resolution : படப்புள்ளிச் செறிவு : துல்லியத் திரைத்தெளிவு;படத் தெளிவு;தெளிவுத்திறன்;படிப்பாற்றல் : ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்கூறுகள் கொண்ட படத்தைவிட அதிகத் துல்லியமாக இருக்கும். உயர் தெளிவுத்திறன் ஒரு நேர்த்தியான உருக்காட்சியை உருவாக்குகிறது. கணினி வெளிப்பாட்டின் துல்லியத்தை அளவிடும் அலகு இது.

resolution of the terminal : முனையத்தின் ஆற்றல் பிரிவீடு.

resolution, plotter : வரைவி தெளிவுத் திறன் : வரையப்பட்ட உருக்காட்சியின் தரத்தின் அளவீடு. ஒரு எண்மான வரைவியிலுள்ள முகவரியிடக்கூடிய புள்ளிகளின் எண்ணிக்கை, தெளிவுத் திறனைத் தீர்மானிக்கிறது. புள்ளிகள் அதிகமிருந்தால் தெளிவுத்திறனும் அதிகமாக இருக்கும்.

resolve : தீர்;தெளிவி : 1. ஒரு தரவுத் தளத்தில் அல்லது