பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

resolve conflicts

1253

resource ID


தேடறி அட்டவணை(Lookup Table)யில் ஒரு துண்டுத் தகவலை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல். 2. வன்பொருள் முரண்கள் எதுவும் ஏற்படாவண்ணம் தகவமைவு அளபுருக்களை அமைத்தல். 3. தருக்கமுறை நினைவக முகவரியை மெய்யான முகவரியாக மாற்றியமைத்தல் அல்லது மெய்முகவரியைத் தருக்க முறை முகவரியாக மாற்றுதல்.

resolve conflicts:முரண்களைச் சரி செய்.

resource:ஆதாரம்;வளம்:ஒரு கணினி ஆதாரம்.அமைப்பின் தொகுதியைச் சேர்ந்த ஒர் நினைவகம்,அச்சுப்பொறி,வட்டுச் சேமிப்பு அலகு, காட்சித்திரை,மென்பொருள்,பொருள்கள்,செயற்பாட்டு ஆட்கள் இந்த ஆதாரத்தில் அடக்கம்.

resource allocation:ஆதார ஒதுக்கீடு;வள ஒதுக்கீடு:கணினி ஆதாரங்களைப் பல்வேறு பணிகள் அல்லது நடவடிக்கைகளுக்கிடையே பகிர்ந் தளித்தல்.

resource data:வளத் தரவு:பட்டி,சாளரம் அல்லது உரையாடல் பெட்டி போன்ற ஒரு குறிப்பிட்ட வளத்துடன் தொடர்புடைய தரவுக் கட்டமைப்புகள், முன்வடிவங்கள்,செயல் முறை வரையறைகள்,மேலாண்மை நிரல்கூறுகள், சின்னக் குறிப்புப் படங்கள் மற்றும் இது போன்றவற்றைக் குறிக்கும்.

resource file:ஆதாரக் கோப்பு:பயன்பாட்டுச் செயல்முறைகளினால் பயன்படுத்தப் படுவதற்கு வட்டில் அல்லது நாடாவில் சேமித்து வைக்கப் பட்டுள்ள செயல்முறைகள் அல்லது தரவுகள்.

resource fork:ஆதாரக் கவடு:ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் ஆதாரப் பகுதி. எடுத்துக்காட்டாக,ஒரு வாசக ஆவணத்தில்,இது தரவு வட்டிலுள்ள வாசகத்துக்குக் குறை நிரப்புகிற உருவமைவுக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது.ஒரு செயல் முறையில்,இது நிறைவேற்றத்தக்கக் குறியீடு,பட்டியல்கள்,பலகணிகள்,உரையாடல் பெட்டிகள்,பொத்தான்கள், எழுத்து முகப்புகள்,உருவடிவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

resource ID:வள அடையாளம்:ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் ஒரு குறிப்பிட்ட வள வகையில் ஒரு குறிப்பிட்ட வளத்தினை அடையாளம் காட்டும் ஒர் எண்.(எ-டு)MENU