பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

response

1255

Гetrace


எழுத்துருவுக்குFONT, காட்டிகளுக்குCURSபோன்ற பெயர்ச் சிட்டைகள் பயன்படுகின்றன.

response : பதில்.

response position : பதிலீட்டு இட நிலை : ஒளியியல் நுண்ணாய்வில், ஒர் ஒளியியல் குறியேற்புப் படிவத்தில் தகவல்களைக் குறிப்பதற்காகக் குறிக்கப்பட்டுள்ள பகுதி.

response time : பதிலீட்டு நேரம் : ஒரு குறிப்பிட்ட உட்பாட்டுக்குக் கணினி அமைவு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம். ஒரு நிகழ்வுக்கும் அந்த நிகழ்வுக்குப் பொறியமைவு அளிக்கும் பதிலுக்குமிடையிலான இடை வேளை.

response unit, audio : கேட்பொலி தரு கருவி.

restart : மறுதொடக்கம் : ஒரு செயல்முறை நிறைவேற்றத்தை மீண்டும் தொடங்குதல்.

restore : மீட்டாக்கம்;மீட்டெழுதல்.

restore backed files : காப்புக் கோப்புகளை மீட்டெடு.

restore defaults : முன்னிருப்புகளை மீட்டெடு.

restore statement : மீட்டாக்கக் கட்டளை.

restrícted function : கட்டுப்படுத்திய செயற்பணி : ஒரு பயன்பாட்டுச் செயல்முறை வாயிலாகப் பயன்படுத்த முடியாத கணினி அல்லது செயற்பாட்டுப் பொறியமைவுச் செயற்பணி.

result processing module : தேர்வு முடிவுச் செய்முறைப் படுத்தும் தகவமைவு.

results : முடிவுகள், விடைகள் : கணினிச் செய்முறைப்படுத்தலின் விளைபயன்.

resume : மீள் தொடக்கம்.

resume error : மீட்டாக்கப் பிழை;மீள்தொடக்கப் பிழை.

retention period : வைத்திரு காலம்.

reticle : ஒளிநுண்வலை : ஒருங்கிணைந்த சுற்றுவழித் திரையை உருவாக்குவதற்குப் பயன்படும் ஒளிப்படத் தகடு.

retrace : மீள்படியெடுப்பு : ராஸ்டர்-வருடல் கணினித் திரையகத்தில் மின்னணுக் கற்றை பின்பற்றும் பாதை, வலது ஒரம் சென்றபின் இடது ஒரத்துக்குத் திரும்புவதும், திரையின் அடிப்பகுதியிலிருந்து மேல்பக்கத்துக்குத் திரும்புவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மீள்படியெடுப்பின் போது மின்னணுக் கற்றையின்