பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

retrieval

1256


இருப்பிடம், இடமிருந்து வலமாக அல்லது மேலிருந்து கீழான அடுத்தகட்டப் பயணத்துக்குத் தயாராக நிர்ணயிக்கப் படுகிறது. இவ்வாறு வலமிருந்து இடமாக, கீழிருந்து மேலாக மின்னணுக்கற்றை பயணிக்கும்போது, கற்றை அகல் நிலை (OFF) ஆக்கப்படுகிறது. இதனால் திரையில் தேவையற்ற ஒரு கோடு வரையப்படுவது தடுக்கப்படுகிறது. மீள்படியெடுப்பு ஒரு வினாடியில் பலமுறை நிகழ்கிறது. தீர்க்கமான ஒத்திசைவுச் சமிக்கைகள் மூலம் ஒவ்வொரு முறையும் மின்னணுக்கற்றை அகல் நிலையாக்கப்படுகிறது.

retrieval : மீட்பு : ஒரு தரவு தளத்திலிருந்து அல்லது கோப்புகளி லிருந்து தரவுகளை மீள எடுத்தல்.

retrival, infomation : தகவல் மீட்பு.

retrival of data : தரவு மீட்பு.

retrieve : மீட்டெடு;முனைந்து பெறு;கண்டு எடு;பெறு : கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விவரம் அல்லது தரவுத் தொகுதியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, கேட்ட நிரல் அல்லது பயனாளருக்கு அனுப்பி வைத்தல். வட்டுகள், நாடாக்கள், நினைவகம் போன்ற எத்தகைய சேமிப்பகங் களிலிருந்தும் தரவுவைக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் கணினிகளுக்குண்டு.

retrieving : மீட்டாக்கம் : சேமித்து வைக்கப்பட்ட தரவுகளைத் தேவையானபோது பெறுவதற்கான செய்முறை.

retrofit : புதுமையாக்கம்;மேம்பாட்டு உறுப்பிணைத்தல் : தற்போதுள்ள ஒரு பொறியமைவினை மேம்படுத்துவதற்காக அதனை நாளது தேதிவரைப் புதுப்பித்தல் அல்லது அதில் புதியன சேர்த்தல்.

return : மீள்வு;திரும்பு : முதன்மைச் செயல்முறையில் உரிய இடத்திற்குக் கட்டுப்பாடு திரும்புவதற்கு அனுமதிக்கிற ஒரு துணைவாலாயத்தின் முடிவிலுள்ள நிரல்களின் தொகுதி.

return, carriage : நகர்த்தித் திரும்பல்.

return code : திரும்பும் குறி முறை : நிரலாக்கத்தில் ஒரு செயல்கூறு (Function) அல்லது ஒரு செயல்முறை (Procedure) தன் பணியை முடித்தபின் கிடைக்கப் பெறும் விடையை அழைத்த நிரல் அல்லது நிரல்கூறுக்குத் திருப்பியனுப்பும். வெற்றிகரமாக விடை திருப்பியனுப்பப் பட்டதா என்கிற விவரம் அழைத்த நிரலுக்குக் கிடைக்கும். இந்த விவரமே திரும்பும்