பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

return from the dead

1257


குறிமுறை எனப்படுகிறது. இந்தக் குறிமுறையின் அடிப்படையிலேயே நிரலின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.

return from the dead : சாவிலிருந்து மீள்வு;அழிவிலிருந்து மீள்வு : இணையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது திடீரென இணைப்புத் துண்டிக்கப்படலாம். அவ்வாறு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைய இணைப்பைப் பெறல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

RETURN key : மீள்வு விசை : ஒரு கணினி விசைப்பலகையில், காட்சிச் சறுக்குச் சட்டம் அல்லது அச்சடிப்பி ஊர்தி அடுத்த வரியின் தொடக்க நிலைக்கு நகரும்படி செய்யப் பயன்படுத்தப்படும் விசை.

return to zero : சுழிக்குத் திரும்புதல் : காந்த ஊடகங்களில் தரவுவைப் பதியும் ஒரு வழிமுறை. காந்தப் புலம் இல்லாத நிலை, அடிப்படை நிலை அல்லது நடுநிலையாகக் கொள்ளப்படும்.

return type : திருப்பியனுப்பும் தரவினம்.

reusable : மறுபயனீடு;மறு பயனுறு : ஒரு வாலாயத்தின் ஒரே படியினை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்த அனுமதித்தல் ஒரு வாலாயத்தின் இயல்பு.

reusable object : மறு பயனுறு பொருள்.

reusability : மறு பயன்பாட்டுத் திறன் : ஒரே செயல்முறைப் படுத்தும் நிரல் தொகுதியை அல்லது பொறியமைவு வடிவமைப்பினை இன்னொரு பயன்பாட்டுக்கு முழுவதுமாக அல்லது பகுதியாகப் பயன்படுத்துவதற்கான திறன்.

reverse : தலைகீழ், முன்பின்.

reverse engineer : மறி நிலையாக்கம் : ஒரு முழுமை பெற்ற பொறியமைவின் அமைப்பிகளைத் தனிமைப்படுத்துதல். ஒரு சிப்பு மறிநிலையாக்கம் செய்யப்படும்போது, அந்தச் சிப்புவில் அடங்கியுள்ள அனைத்துத் தனித்தனிச் சுற்று வழிகளும் அடையாளங் காணப்படுகின்றன.

reverse path forwarding : எதிர் நிலை வழி முன்னோக்கல்.

reverse polish notation : மறி நிலைப் போலிஷ் குறிமானம் : ஹேவெல்ட் பேக்கார்டு கணிப்பிகளில் பயன்படுத்தப்படும் பின்னொட்டுக் குறிமான வடிவம். இதில் இயக்கப்படு