பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reverse text

1258

RFC


எண்கள் இயக்கிகளுக்கு முன்னர் பதிவு செய்யப்படுகின்றன. இதில் z=a (b+c) என்னும் கோவை bc+axz=என்று எழுதப்படுகிறது.

reverse text : மறுநிலை வாசகம் : காகிதம் எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில், ஒரு மாறுபட்ட கறுப்பு அல்லது வண்ணப் பின்னணியில் தட்டச்சு செய்யப்பட்ட வாசகம்.

reverse video : மறுநிலை ஒளிக்காட்சி : கணினி பயன்படுத்துபவரின் கவனத்தை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு ஈர்ப்பதற்குக் காட்சித்திரையில் பயன்படுத் தப்படும் ஒர் உத்தி. இதனை தலைகீழ் ஒளிக்காட்சி என்றும் கூறுவர்.

review : சீராய்வு;மீள் பார்வை : ஒரு புதிய பொறியமைவின் செயற்பாட்டுத் திறனை மதிப்பிட்டறிதல்.

rewind : மீள்சுற்று : ஒரு காந்த நாடாவை அதன் தொடக்க நிலைக்கு மீண்டும் கொண்டு வருதல்.

rewrite : மறு எழுத்து : ஒன்றை அழித்துவிட்டு மீண்டும் எழுதுதல்.

RΕΧΧ : ரெக்ஸ் : மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/2 பதிப்பு 2. 0-லும் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு நிரலாக்க மொழி. இம்மொழி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்குகிறது. இயக்கமுறைமைக் கட்டளைகளையும் செயல்படுத்தும்.

RF : ஆர் எஃப் : வானொலி அதிர்வெண்'என்று பொருள்படும் Radio Frequency'என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பல்வேறு மின்காந்தக் கதிர்வீச்சுகளைக் குறிக்கிறது. இது வினாடிக்கு 10, 000 முதல் 40, 000 கோடி சுழற்சிகள்வரை மாறுபடும். இது பெரும்பாலும் செய்தித் தொடர்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

RFC : ஆர்எஃப்சி : மதிப்புரைக்கான கோரிக்கை எனப்பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தரவரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் இவற்றில் ஒன்றுபற்றி பிற பார்வையாளர்கள், ஆர்வலர்களின் கருத்துரை