பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RFI

1259

RGB Video


களைக் கேட்டு இணையத்தில் வெளியிடப்படும் ஒர் ஆவணம். ஐஏபி-யின் கட்டுப்பாட்டில் இவை வெளியிடப்படுகின்றன. விவாதங்களுக்குப் பிறகு இவையே இறுதித் தரவரையறையாக ஆகிவிடுகின்றன. இன்டர்நிக் போன்றவற்றின் அமைப்புகளிடமிருந்து ஏராளமான ஆர்எஃப்சிக்-களை பெற முடியும்.

RFI : ஆர்எஃப்ஐ : வானலை அலைவரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற மின்சுற்றுகளில் உருவாகும் மின்காந்த கதிர்வீச்சினால் ஏற்படும் இரைச்சலைக் குறிக்கிறது.

RF modulator : ஆர் எஃப் அதிர்விணக்கி : சாதாரண தொலைக் காட்சியில் படம் தெரியும்படி செய்வதற்கு ஒரு நுண்கணினியை அனுமதிக்கும் ஒரு சாதனம்.

RF shielding : ஆர்எஃப் காப்புறை : வானலை வரிசை ஊடுருவாமல் தடுப்பதற்குப் பயன்படும் கட்டமைப்பு. பெரும்பாலும் உலோகத் தகடு அல்லது உலோக மேற்பூச்சினால் அமைந்திருக்கும்.

RGB monitor : ஆர்ஜிபி திரையகம் : சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய அடிப்படை நிறங்களுக்கான சமிக்கைகளை தனித்தனித் தடங்களில் பெறுகின்ற ஒரு வண்ணத் திரையகம். மேற்கண்ட மூன்று நிறங்களுக்கான நிலை அளவுகளை ஒற்றைத் தடத்தில் பெறுகின்றது. கலப்பு இனத் திரையகங்களை விடப் பொதுவாக தெளிவான, தூய படிமங்களை உருவாக்கும் திறன்படைத்தவை.

RGB video : ஆர்ஜிபி ஒளிக்காட்சி : ஒருவகை வண்ண ஒளிக்காட்சிக் குறியீடு (சிவப்பு, பச்சை, நீலம்) செந்திறமான தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கலவை வண்ண ஒளிக்காட்சியிலிருந்து வேறுபட்டது. இதனை ஒரு வண்ணக்காட்சித் திரையில் மட்டுமே காட்டலாம்;இதில்

இந்த அடிப்படை வண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் துப்பாக்கிகள் அமைந்திருக்கும். சாதாரண வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரேயொரு துப்பாக்கி மட்டுமே இருக்கும். ஆர்ஜிபி திரைகள் துல்லியமும் பிரகாசமான வண்ணங்களும், உயர்ந்த தெளிவுத் திறனும் உடையவை.