பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ribbon

1260

right justify


ribbon : நாடா : பல்வேறு தாக்குறவு மற்றும் தாக்குறவற்ற (எடுத்துக்காட்டு : அனல்) அச்சுப்பொறிகளில் மையூட்டும் சாதனம். பெரும்பாலான நாடாக்கள், மையேற்றம் செய்யப்பட்ட செயற்கை இழைகளிலானவை. இவை இரு வகையின : ஒன்று, ஒரடி வகை;இதனை ஒரே முறைதான் பயன்படுத்தலாம், இன்னொன்று பன்முறை அடி வகை இதனைப் பலமுறை பயன்படுத்தலாம். பன்முறை அடிவகை நாடாக்களைவிட, ஒரடிவகை நாடாக்களைப் பயன்படுத்துவதற்குச் செலவு அதிகம் பிடிக்கும். எனினும் ஒரடிவகை நாடாவின் எழுத்துகள் அதிகத் தெளிவாக இருக்கும்.

ribbon cable : பட்டிகை கம்பிவடம் : ஒரு போக்கான கம்பிகள் தட்டையாக இணைக்கப்பட்ட

பட்டகைக் கம்பிவடம்

கம்பி வடத்தின் தொகுதி. இதில் ஏராளமான கம்பிகள் அருகருகே அமைக்கப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் கணினிகளைப் புறநிலைச் சாதனங்களுடன் இணைக்கப் பயன்படுத்தப் படுகிறது.

ribbon cartridge : பட்டிகை உறை;நாடா பேழை : அச்சுப்பொறி நாடா வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் உறை.

ribbon spool : நாடா கண்டு.

right : வலம்/வல.

right, access : அணுக்க உரிமை.

right arrow : வலது அம்புக்குறி.

right click : வலச் சொடுக்கு.

right disk : விறைப்பு வட்டு;நிலை வட்டு.

right justified : புலச் சரியமைவு : கடைசி எழுத்து (இலக்கம்) புலத்தின் கடைசி இடத்தில் ஒரு நிலைப்படுத்தப்படும் வகையில் அமைந்த பாட்டுப் புலத்தின் இணைப்பு முறை.

right justify : வலப்புற வரிச் சரியமைவு : கடைசி எழுத்து (இலக்கம்) புலத்தின் கடைசி இடத்தில் ஒரு நிலைப்படுத்தப்படும் வகையில் அமைந்த பாட்டுப் புலத்தின் இணைப்பு முறை.