பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RISC

1262

Roach, John


பொருள்படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக்குறைந்த எண்ணிக்கையிலான எளிய நிரல்களின் அடிப்படையில் அதிவேகமாய் திறன்மிக்கதாய் செயல்படக்கூடிய ஒரு நுண் செயலி வடிவமைப்பு. ஒவ்வோர் நிரலையையும் ஒரு கடிகாரச் சுழற்சியிலேயே அதிவேகமாய் செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது ரிஸ்க் கட்டுமானம்.

மிக எளிய நிரல்களைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் நுண் செயலிகளைக் காட்டிலும் சிஸ்க் (CISC-Complex instruction Set Computing) நுண்செயலிகள் மிகவேகமாய் நிறைவேற்றுகின்றன. ஆனால், மிகவும் சிக்கலான நிரல்களைப் பொறுத்த மட்டில் ரிஸ்க் செயலிகளைவிட வேகத்தில் குறைந்தவையே காரணம், சிஸ்க் செயலிகள் சிக்கலான செயல்பாட்டிற்கும் தனித்தனி நிரல்களைக் கொண்டுள்ளன. ரிஸ்க் செயலிகள் பல நிரல்களின் தொகுப்பாக அவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது. சன் மைக்ரோ சிஸ்டமஸ் நிறுவனத்தில் ஸ்பார்க் செயலி, மோட்டோரோலாவின் 88, 000 இன்டெல்லின் ஐ 860, ஆப்பிள், ஐபிஎம் மோட்டோரோலா ஆகியவற்றின் பவர்பீசி, ரிஸ்க் வகையைச் சேர்ந்தவை.

R1/SME : ஆர்ஐ/எஸ்எம்ஐ : பன்னாட்டு எந்திரன் உற்பத்திப் பொறியாளர் கழகம் (Robotics International of the Society of Manufacturing Engineers) என்ற அமைவனத்தின் தலைப் பெழுத்துச் சுருக்கம். இது எந்திரன்களை வடிவமைத்துப் பயன்படுத்தும் பொறியாளர்களின் அமைப்பாகும்.

RJE : ஆர்ஜேஇ : சேய்மைப் பணிப் பதிவு என்று பொருள்படும்'Remote Job' என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

RO : ஆர் ஓ : 'பெறுதல் மட்டும்'என்று பொருள்படும்'Receiving Only'என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

Roach, John : ரோச் ஜான் : 1977இல்'டாண்டி கார்ப்பொரேஷன்'TRS 80' என்ற அமைவனத்தின் வானொலிப் பிரிவு என்ற நுண்கணினியை வெளி யிட்டது. அப்போது அந்த அமைவனத்தின் துணைத் தலைவராக இருந்தவர் ஜான் ரோச். பெரும் புகழ்பெற்ற இந்த வகை நுண்கணினி உருவாக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர்.