பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rocket

1264

rollover


திறம்பாடு. எடுத்துக்காட்டு : உட்பாட்டில் பிழைகளை எதிர்பார்த்து, செய்முறையில் வேண்டுமென்றே ஒரு செயல்முறைத் தருக்கமுறையைச் சேர்த்தல்.

rocket : ராக்கெட் : ஒரு உள்ளெரி அறையின் பின்புறத்திலுள்ள குழாய் முனை அல்லது தாரை வழியாக வெளியேறும் வாயுக்களின்மூலம் செயற் படும், தானாகவே முன் செலுத்தப்படும் சாதனம்.

rod memory : தண்டு நினைவுப் பதிப்பி;தண்டு நினைவகம் : நிக்கல் அல்லது இரும்பு உலோகக் கலவை பூசப்பட்டு, கோல்களின் வடிவில் வெட்டப்பட்டுள்ள கணினிச் சேமிப்பகம்.

role-playing game : பாத்திரமேற்று நடிக்கும் விளையாட்டு : நடப்பு வாழ்க்கையில் சந்திக்கும் பாத்திரங்களை ஏற்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நடித்துக் காட்டுவது. பெரும்பாலும் மேலாண்மைப் பயிற்சியகங்களில் பயிற்சியாளர் களுக்கு இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவதுண்டு. ஒர் அதிகாரியிடம் புகார் தர வருகின்ற வாடிக்கையாளர் ஒருவர் எப்படி நடந்து கொள்வார், அதிகாரி அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பயிற்சியாளர்கள் நடித்துக் காட்ட வேண்டும். மேலாண்மைப் பதவிகளை வகிக்கப் போகிறவர்கள் நடப்பு வாழ்வில் சந்திக்கவிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன.

rollback : பின்னோட்டம்;பின்னுருள்தல் : ஒரு பொறியமைவில் தவறு நேர்ந்த பிறகு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான பொறி யமைவு. தரவுகளும் செயல் முறைகளும் காலாந்திர இடைவெளிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கடைசியாகப் பதிவான நொடிப்பொழு திலிருந்து பொறியமைவு மீண்டும் இயங்கத் தொடங்கும்.

roller : உருளை.

roll out : வெளிக்கொணர்தல்;வெளியேற்றல் : துணைச் சேமிப்பிகளிலுள்ள உள்முகச் சேமிப்பியின் உள்ளடக்கங் களைப் பதிவு செய்தல்.

rollover : தற்காலிக நினைவுப் பதிப்பி;சுற்றிக் கொள்ளல் : தட்டச்சுச் செய்த எழுத்துகளையும் நிரல்களையும் கணினியமைவு எத்துணை வேகமாகச் செய்முறைப்படுத்த கூடுமோ அதைவிட வேகமாக அவை