பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ROM simulator

1266

root directory


கணினியில் ரோம் சிப்புகள் இருக்கும் இடத்தில் இணைக்கப்பட்டுள்ள, ரேம் (RAM) நினைவகச் சிப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு மின்சுற்று. தனியான ஒரு கணினி இந்த ரேம் சிப்புகளில் தரவுவை எழுதும். இலக்குக் கணினி ரோம் சிப்புகளைப் படிப்பதற்குப் பதிலாக இந்த ரேம் சிப்புகளிலுள்ள தரவுவைப் படித்துக் கொள்ளும். ரோமில் இருத்திவைக்கும் நிரல்களைச் சரிபார்க்க (debug), அதிக செலவும் தயாரிப்பு காலமும் ஆகும் ரேம் சிப்புகள் இல் லாமலேயே இந்தவகை விலைகுறைவான ரேம் சிப்புகளைக் கொண்டு செய்து முடிக்க முடியும். ஈப்ரோம் (EPROM) சிப்புகளைக்காட்டிலும் ரோம் போலிகை விலை அதிகம் எனினும், ஈப்ரோமைவிட மிக விரைவாக உள்ளடக்கத்தை மாற்ற முடியும் என்பதால் இந்த வகை ரேம் சிப்புகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

ROM simulator : ஆர்ஓஎம் மாற்றுரு : ஒரு பொறியமைவில் செயல் முறைச் சரிபார்ப்பின் போதுRom, PROMநினைவகங்களுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் ஒரு பொது நோக்குச் சாதனம். இது மின்சுற்று வழி மாற்றுருவாக்கத்தில் இயல்பு நேரத்தை (Real time) அளிக்கிறது. இது பொறியியல் உருமாதிரிகளில் அல்லது படிப்பெருக்க உருமாதிரிகளில் தவறுகளைத் திருத்துவதற்கான செயல்முறைகளில் அல்லது உற்பத்தி உருமாதிரிகளில் புதிய அம்சங்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

root : வேர்;மூலம் : ஒரு மர வரைபடத்தில் தலையாய கூறு அல்லது மையமுனை. இதிலிருந்து இலை முனைகளுக்கு கிளைகள் கிளைத்துச் செல்லும்.

root account : வேர்க் கணக்கு;மூலக் கணக்கு;முதன்மைக் கணக்கு : யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய்கின்ற பயனாளரின் கணக்கு. முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்.

root directory : மூல சேமிப்பகம்;மூலக்கோப்பகம்;வேர்க் கோப்பகம்; முதன்மைக் கோப்பகம்;தலைமைக் கோப்பகம் : வட்டு அடிப்படையிலான படி நிலைக் கோப்பகக் கட்டமைப்புகளில் தலைமையாக இருப்பது. இதிலிருந்தே பிற