பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

root name

1267

rotation


கோப்பகங்களும் உள் கோப்பகங்களும் பிரிகின்றன. ஒவ்வொரு கோப்பகமும் ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகள் அல்லது உள்-கோப்பகங்களைக் கொண்டிருக்கலாம். (எ-டு) டாஸ் இயக்க முறைமையில் பின்சாய்வுக் கோடு (\) மூலக் கோப்பகத்தைக் குறிக்கிறது. அதன்கீழ்தான் பிற கோப்பகங்களும், உள் கோப்பகங்களும், கோப்புகளும் இடம் பெறுகின்றன.

root name : முதன்மைப் பெயர் : எம்எஸ் டாஸ், விண்டோஸ் போன்ற இயக்க முறைமையில் ஒரு கோப்பின் பெயர் இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி முதன்மைப் பெயர் என்றும், அடுத்த பகுதி நீட்டிப்பு (Extension) என்றும் அழைக்கப்படுகிறது. நீட்டிப்பு பெரும்பாலும் அக்கோப்பின் வகையைக் குறிப்பதாக அமையும். (எ-டு) : commandcom;edit. exe; letter. txt.டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x -ல் முதன்மைப் பெயர் அதிக அளவாக எட்டு எழுத்துகளையே கொண்டிருக்கும். வகைப்பெயர் அதிக அளவாக மூன்றெழுத்துகள். இரண்டுக்கும் இடையே ஒரு புள்ளி இடம் பெறும். விண்டோஸ் 95/98/என்டி மற்றும் பிறகு வந்தவற்றில் கோப்பின் பெயர் அதிக அளவாக 255 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம்.

rotate : சுழற்று;திருகு;சுழல் நகர்வு : 1. திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப் படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில் (register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம் ஒரிடம் நகரச் செய்தல். இத்தகைய நகர்வினால் ஒரு முனையில் இடமின்றி நகர்த்தப்படும் இறுதி துண்மி (பிட்) எதிர்முனையில் வெற்றிடமாகும் இடத்தில் ஒட்டிக்கொள்ளும்.

rotating memory : சுழல் நினைவகம் : காந்தத் தரவு சேமிப்புச் சாதனம். இது ஒரு வட்டத் தகட்டுவடிவில் அமைந்திருக்கும். இது ஒர் ஒலிப்பதிவுத் தட்டுபோல் சுழலும்.

rotation : சுழற்சி கணினி வரை : கலையில் ஒரு கணினி உருவாக்கிய உருவத்தை, அதன் மூலப்புள்ளியிலிருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்திற்குச் சுழற்றுதல். முப்பரிமாண வரை கலையில், உருவத்தை இடப்பரப்பில் அச்சினைச் சுற்றிச்