பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rotational delay

1268

round


சுழற்றி, வேறு தோற்றங்களை உருவாக்கலாம்.

rotational delay : சுழற்சி காலத்தாழ்வு;சுழற்சிச் சுணக்க காலம் : ஒரு வட்டின் ஒரு பகுதியிலுள்ள ஒரு பதிவு, எழுது/படிப்பு முனையின் கீழ் சுழல்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்.

rotation speed : சுழற்று வேகம்.

rotation tool : சுழற்று கருவி.

ROT 13 encryption : ராட் 13 மறையாக்கம் : ஒர் எளிய தரவு மறையாக்கமுறை. தரவிலிலுள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும், அதற்கடுத்து 13 எழுத்துகளும் பிறகுவரும் எழுத்தால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும். (எ-டு) A என்னும் எழுத்துக்குப் பதில் N என்னும் எழுத்து பதிலீடு செய்யப்படும். மறுமுனையில் N என்னும் எழுத்து A என மாற்றப்படும். 2 என்னும் எழுத்து M ஆக மாற்றப்படும். ராட் 13 மறையாக்கம், தரவுவைப் பிறர் படிக்கக்கூடாது என் பதற்காகச் செய்யப்படுவதில்லை. செய்திக் குழுக்களில் பயனாளர் படிக்க விரும்பாத ஆபாசத் தரவுகளை குறியாக்கம் செய்யவே பயன்படுத்தப்படு கின்றன. சில செய்தி படிப்பு மென்பொருள்களில் ஒரு விசையை அழுத்தியவுடனே மறையாக்கம் செய்யவும், மறை விலக்கம் செய்யவும் வசதி உண்டு.

RO terminal : ஆர் ஓ முனையம்;படிக்க மட்டுமான முனையம் : தரவுகளை ஏற்றுக்கொள்ள மட்டுமே செய்து, அனுப்பீடு செய்யாத செய்தித் தொடர்பு எந்திரம்.

round : தோராயம்;ஏறத்தாழ;முழுமையாக்கம் : ஒர் எண்ணின் பின்னப் பகுதியின் இலக்கங்களைக் குறைக்கும் வழிமுறை (எ-டு) : மூன்றாவது இலக்கம் வரை போதுமெனில் நான்காவது இலக்கம்5அல்லது அதற்குமேல் இருப்பின் மூன்றாவது இலக்க மதிப்பை ஒன்று கூட்டிக் கொள்ள வேண்டும்.

12. 3456 -> 12. 346

நான்காவது இலக்க மதிப்பு5-க்குக் குறைவாக இருப்பின் மூன்றாவது இலக்க மதிப்பை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.

65. 4321 → 65. 432

கணினி நிரல்களில், இவ்வாறு முழுமையாக்கல் செயல்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் வருவதுண்டு. (எ-டு) நான்கு மண்டலங்களில் விற்பனையாகும் ஒரு பொரு