பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

RS-422

1271

rudder control


போன்ற செய்தித்தொடர்புச் சாதனங்களுக்குமிடையில் தகவல் செய்தித் தொடர்புகளுக்கான தரஅளவு. பெரும்பாலான நுண்கணினிகள் RS-232C இடை முகப்புகளை அளிக்கின்றன.

RS-422 : ஆர்எஸ்-422 : மிக உயர்ந்த வேகத்தொடர் இணைப்பு வழிக்காக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தர அளவு.

RTFM : ஆர்டிஎஃப்எம் : ஒளிப் பிழம்பான (அல்லது தோழமையான) விளக்கக் குறிப் பேட்டைப்படி என்று பொருள்படும் Read the Flaming (or Friendly) manual என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணையச் செய்திக் குழுவில் அல்லது விற்பனைப் பொருள் அறிமுக கருத்தரங்குகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் ஒரு வழக்கமான பதில். குறிப்பேட்டில் அக்கேள்விக்கான பதில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது என்பது பொருள்.

RTS : ஆர்டிஎஸ் : அனுப்பி வைக்கக் கோரிக்கை என்று பொருள்படும் Request To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தகவலை அனுப்பி வைக்க அனுமதி கேட்டு, இணக்கிக்குக் கணினி அனுப்பும் ஒரு சமிக்கை. பொதுவாக நேரியல் (serial) தகவல் தொடர்பில் இது பயன் படுத்தப்படுகிறது. ஆர்எஸ்232-சி இணைப்புகளில் 4-வது பின்னில் அனுப்பப்படும் வன்பொருள் சமிக்கையே ஆர்டிஎஸ் எனப்படுகிறது.

. ru : . ஆர்யு : ஒர் இணைய தள முகவரி ரஷ்ய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர்.

rubber banding : ரப்பர் கட்டுக் கம்பி : ஒரு மின்னணுவியல் பேனா அல்லது நுண்பொறி மூலமாக காட்சித் திரையின் குறுக்கே, ஒர் அமைப்பானைத் தேவையான அமைவிடத்திற்குத் தடம் பெயர்க்க அனுமதிக்கும் கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (CAD) திறம்பாடு. இது ஒரே சமயத்தில், தொடர்புடைய இடை இணைப்புகள் அனைத்தும் குறியீடு தொடர்ந்து இருந்து வரும்படி செய்யும்.

rubout key : நீக்கவிடைக் குறிப்பு : ஒரு முனையத்தில் பதிவு செய்யப்பட்ட கடைசி எழுத்தினை நீக்கம் செய்கிற விசைப்பலகை விடைக் குறிப்பு.

rudder control : சுக்கான் இயக்கு விசை : விமானப் பறப்புப் பாவிப்பு நிரல்களில், பயனாளர்