பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

run around

1273

run on top of


run around : சுற்றோட்டம் : மேசை வெளியீட்டுத் தொகுதியில், ஒரு வரைகலை உருக்காட்சியைச் சுற்றி வாசகங்களை அமைத்தல்.

run commond : 'இயங்கு' நிரல்.

run database query : தரவுத்தள வினவல் இயக்கு.

run macro : குறுமம் இயங்கு.

run-length limited encoding : இயக்க நீள வரம்புறு குறியாக்கம் : சுருக்கமாக ஆர்எல்எல் குறியாக்கம் எனப்படுகிறது. மிக விரைவான, திறன் மிகுந்த தரவு சேமிப்பு வழிமுறை. குறிப்பாக வட்டுகளில் அதிலும் குறிப்பாக நிலைவட்டுகளில் தரவுவைச் சேமிக்கும் முறை. தகவலின் ஒவ்வொரு துண்மியும் (பிட்) உள்ளபடியே சேமிக்கப் படுவதில்லை. குறிப்பிட்ட தோரணியில் அமைந்த துண்மி (பிட்) கள் குறிமுறையாக மாற்றப்பட்டு பதியப்படுகின்றன. தொடர்ச்சியாக வரும் சுழிகளின் (zeroes) எண்ணிக்கை அடிப்படையில் மின்புலம் தீர்மானிக்கப்படுகிறது. மிகக்குறைந்த மின்புல மாறுதல்களுடன் நிறைந்த அளவு தரவு சேமிக்க முடிகிறது. பழைய முறைகளான எஃப்எம் (FM-Frequency Modulation) மற்றும் எம்எஃப்எம் (MFM. Modified Frequency Modulation) ஆகிய முறைகளில் இதே அளவு தரவுவைச் சேமிக்க மிக அதிகமான இடம் தேவைப்படும்.

run manual : ஓட்டக் கையேடு : ஒரு கணினி இயக்கத்துடன் தொடர்புடைய செய்முறைப் படுத்துதல், பொறியமைவுச் செயல்முறை, தருக்கமுறைக் கட்டுப்பாடுகள், செயல்முறை மாற்றங்கள், செயற்பாட்டு நிரல்கள் ஆகியவற்றை ஆவணமாக்கிய கையேடு அல்லது நூல்.

running foot : ஓடும் அடி : சொல்செயலி ஆவணங்களில் ஒரு பக்கத்தின் அடி ஒரப் பகுதியில் பக்கஎண், அத்தியாயப் பெயர், தேதி போன்றவை ஒன்று அல்லது பலவும் சேர்ந்து ஒரு வரியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் அமைவது.

running head : ஓட்டத் தலைப்பு : ஒர் ஆவணத்தின் அல்லது நூலின் பக்கங்கள் அனைத்தின் உச்சியிலும் காணப்படுகிற வாசகம். இது, நிறுமத்தின் சின்னமாக அல்லது பக்க எண்ணாக இருக்கலாம்.

running time : ஓட்ட நேரம் : ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம்.

run on top of : உச்சி மேலோட்டம் : ஒரு செயல்முறைக்குக்