பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

run time

1274

run-time version


துணைமையாகவுள்ள துணைச்செயல் முறையினை அதன் கட்டுப்பாட்டுச் செயல்முறையாக ஒட்டுதல். இது'கீழோட்டம்' (Run under) என்பதிலிருந்து வேறுபட்டது.

run time : ஓட்ட நேரம் : கட்டுப்பாட்டு அலகு தரவுகளைப் பெறுவதற்கும் கணிதத் தருக்கமுறை அலகில் உண்மையில் செய்முறைப்படுத்துவதற்கும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம். இதனை'நிறைவேற்ற நேரம்’ (Execution time) என்றும் கூறுவர். இது'தொகுப்பு நேரம் (Compilation time) என்பதிலிருந்து வேறுபட்டது.

run time array : ஓட்ட நேர வரிசை : RPG இல் செயல்முறை ஒடத் தொடங்கிய பிறகு, உட்பாடு அல்லது கணிப்புக் குறிப்புரைகள் மூலம் ஏற்றப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஒர் வரிசை.

run-time binding : இயக்க நேரப்பிணைப்பு : மாறிலி (Variable), சுட்டு (pointer) போன்ற ஒர் அடையாளங்காட்டி எதைச் சுட்டுகிறது என்பதை ஒரு நிரலை மொழிமாற்றும் நேரத்தில் (compile time) குறிக்காமல் நிரல் இயங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுதல். இதனை காலந் தாழ்ந்த பிணைப்பு (Late Binding) என்றும் கூறுவர். இயங்கு நிலைப் பிணைப்பு (Dynamic Binding) என்றும் கூறலாம்.

run-time error : இயக்க நேரப்பிழை : ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2. தருக்க முறைப் பிழை (Logical Error) : இப்பிழையை மொழி மாற்றியோ, கணினியோ கண்டுபிடித்துச் சொல்லாது நிரல் முழுமையாக இயங்கும் ஆனால் பிழையான விடை கிடைக்கும். இதற்குக் காரணம் நிரலர் தருக்க முறையில் செய்த தவறாகும். 3. இயக்க நேரப் பிழை (run-time error) : மொழி மாற்றி பிழை சொல்லாது. நிரல் முழுமையாக நிறைவேற்றப்படாது. இயக்க நேரச் சூழல் (Run Time Environment) அல்லது கணினி முறைமையால் பிழை சுட்டப்பட்டு நிரல் பாதியிலேயே நின்றுவிடும்.

run time exception : இயக்கநேர விதிவிலக்கு.

run-time version : இயக்கநேரப் பதிப்பு;இயக்கநிலைப் பதிப்பு :