பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. SC

1281

scalar



இணைப்பூசிகள் கொண்ட பாட்டை வரன்முறை. மோட் டோராலா 6800, 68000, இன்டெல் ஐஏபீx86 குடும்ப நுண்செயலிகளைக் கொண்ட கணினிகளும் எஸ்-100 பாட்டையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. தொடக்ககால கணினி ஆர்வலர்களிடையே எஸ்-100 கணினிகள் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கின. அவை திறந்த நிலைக் கட்டுமான அமைப்பைக் கொண்டவை. பயனாளர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகைப்பட்ட கூடுதல் விரிவாக்கப் பலகைகளைப் பொருத்திக் கொள்வதற்கு இடமளிப்பதாய் அவை விளங்கியதே இதற்குக் காரணம்.

. sc : . எஸ்சி : ஒர் இணைய தள முகவரி செய்ச்செலீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

scalable : விரிவாக்கத்தக்க : வடிவளவிலும், தோற்றத்திலும் மாற்றம் செய்யத்தக்க.

scalability : தகடாகும் தன்மை : விரிவடையும் திறன் வளர்ச்சிக்கு உதவுவதற்கு நடப்பு நடைமுறைகளில் குறைந்த அளவு மாற்றத்தைக் குறிக்கிறது.

scalable font : விரிவாக்க எழுத்துரு : ஒர் ஆவணத்தைக் காட்சியில் காட்ட அல்லது அச்சிட வேண்டியிருக்கும்போது, தேவையான புள்ளி அளவுக்கு உருவாக்கப்படும் எழுத்து கணினியில் பல்வேறு எழுத்து உருக்களை சேமித்து வைப்பதை விரிவாக்க எழுத்து முகப்பு தவிர்க்கிறது.

scalable parallel processing : அடையத்தக்க இணைநிலைச் செயலாக்கம் : பல்முனைச் செயலாக்கக் கட்டுமானத்தில் ஒருவகை. அதிகச் சிக்கலின்றி, செயல்பாட்டுத் திறனுக்குக் குறைவு நேராவண்ணம் கூடுதல் செயலிகளை இணைத்துக் கொள்ள முடியும்; கூடுதல் பயனாளர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

scalable type face : விரிவாக்க எழுத்துமுகம் : எந்த வடிவளவுக்கும் விரிவாக்கம் செய்யத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட எழுத்துகள், எண்கள், நிறுத்தற்குறிகள், குறியீடுகள் ஆகியவற்றின் ஒரு தொகுதி.

scalar : ஒற்றைமதிப்பு : அளவீடு; அளவுரு : ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தரவு கட்டமைப்புபோல் இல்லாமல்


81