பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scanner

1284

scatter plot



சட்டகத்திலுள்ள பல இடைமட்ட வரிகளில் ஒன்று.

scanner : வருடி; நுண்ணாய்வுக் கருவி; சுட்டும் கருவி : குறிப்பிட்ட காட்சி சைகைகளை உணர்ந்தறியக்கூடிய ஒர் ஒளியியல் சாதனம்.

scanner channel : வருடி அலைவரிசை; வருடல் தடம்; நுண்ணாய்வு வழி : தனிவழிகளில் அனுப்பீடு செய்வதற்கான தரவுகள் ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சாதனம்.

scanner scatter plot : வருடு பரவல் வரைவு : நுண்ணாய்வுப் பரவல் வரைவு : இரு தரவுத்தொகுதிகளிடையிலான தோராய இடைத்தொடர்பினைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். தரவுப் புள்ளிகள் வரைபடத்தில் தனித் தனிப்புள்ளிகளாகச் சிதறலாக அமைவதால் இது பரவல் வரைவு என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் உண்மையான அமைவிடங்கள் வரைபடத்தின் நிலையளவுருக்களினால் வரையறுக்கப்படுகிறது.

scanning : வருடுதல்; நுண்ணாய்வு செய்தல் : ஒரு கணினியின் தரவுப் பட்டியல், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை நிறைவேற்றியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக அதிலுள்ள ஒவ்வொரு இனத்தையும் விரைவாக ஆய்வு செய்தல்.

scan path : வருடல் பாதை ; நுண்ணாய்வு வழி : ஒளியியல் நுண்ணாய்வில், படிக்கப்பட வேண்டிய தரவுகளை எங்கு கண்டறிய வேண்டுமோ அந்தத் தெளிவான பகுதி. நுண்ணாய்வு வழியின் அமைவிடமும், படிக்கவேண்டிய தரவுகளின் அளவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எந்திரத்தைப் பொறுத்திருக்கின்றன.

scan rate : வருடல் வீதம் ; நுண்ணாய்வு வீதம் : ஒரு நுண்ணாய்வுச் சாதனம் தனது காட்சிப்புலத்தில், ஒரு வினாடியில் எத்தனை தடவை மாதிரி எடுக்கிறது என்ற எண்ணிக்கை.

scatter diagram : பரவல் வரையுரு; சிதறல் வரையுரு : ஒவ்வொரு தரவுப் புள்ளியிலும் புள்ளிகள் அல்லது வேறு குறியீடுகள்மூலம் வரையப்படும் வரைபடம். இதனைச் சிதறல் வரைவு அல்லது புள்ளி வரைபடம் என்றும் கூறுவர்.

scatter plot : சிதறல் வரைவு ; பிரி புள்ளி : ஒவ்வொரு தரவு முனையிலும் ஒரு புள்ளியை அல்லது சைகையினை வரை