பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scatter read/gather write

1285

scheduling algorithm



வதன்மூலம் இருமாறியல் அலைவெண் பகிர்மானத்தைக் காட்டுகிற வரைவு. சில சமயம், இரு அச்சுகளில் குறிக்கப்படும் மாறியல் மதிப்புருக்களுக்கிடையிலான தொடர்பினைக் காட்டுவதற்கு ஒரு வளைவு அல்லது ஒரு கோடு சேர்க்கப்படுகிறது. இதனைச் சிதறல் வரைபடம் என்றும் கூறுவர்.

scatter read/gather write : பிரித்துப் படி/சேர்த்து எழுது : சிதறல் படிப்பு/சேகரித்து எழுது : ஒர் உட்பாட்டுப் பதிவேட்டிலிருந்து அண்டையில் இல்லாத சேமிப்புப்பகுதிகளில் வைப்பதை சிதறல் படிப்பு குறிக்கிறது. அண்டையில் அல்லாத சேமிப்புப் பகுதிகளிலிருந்து ஒர் ஒற்றை இயற்பியல் பதிவேட்டில் தகவல்களை வைப்பதைக் குறிக்கிறது.

scenaries : சூழ்நிலைக் காட்சிகள்.

schedule : கால அட்டவணை : குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தகவல்களை குறிப்பிட்டவாறு செயல்படுத்த கணினியை நிரல்படுத்தல்.

scheduled maintenance : காலமுறைப் பராமரிப்பு : திட்டமிட்ட பேணுதல் : கணினிப் பொறியமைவின் நம்பகத்தன்மையைப் பேணுவதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதனைப் பேணிவருதல்.

scheduled report : காலமுறை அறிக்கை; குறிப்பிடப்பட்ட அறிக்கை; திட்டமிட்ட அறிக்கை : பயன்படுத்துவோருக்குச் சீரான கால இடைவெளிகளில் வாலாயத் தகவல்களை அளிப்பதற்காகத் தயாரிக்கப்படும் அறிக்கை.

scheduler : பட்டியலிடுபவர் ; கால முறைப்படுத்தி : செய்முறைப்படுத்துவதற்காகப் பணிகளைக் காலமுறைப்படுத்துகிற செயல்முறை.

scheduling : பட்டியலிடல்; கால முறைப்படுத்தல் : 1. ஒரு பன்முகச் செயல் முறைப்படுத்தும் கணினி மையத்தில் அடுத்து வரும் செயல்முறைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கான பணி. 2. பகிர்ந்து கொள்ள முடியாத ஆதாரங்களை ஒதுக்கீடு செய்தல். எடுத்துக்காட்டு மையச் செயலகம் அல்லது ஒருங்கிணைந்த மின்சுற்று வழிச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட மணிக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்கீடு செய்தல்.

scheduling algorithm : அட்டவணை எண்மானம்; திட்டமிடலும் நெறி முறையும் : நிறைவேற்றவேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்தும் முறை.