பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

schema

1286

scientific language


 இதில் முந்துரிமை, பணிவரிசையில் கால நீட்சி, கைவசமுள்ள வள ஆதாரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

schema : அமைப்பு முறைகள் : (தரவுத் தள நிர்வாக மொழி களில் ஒன்று). தரவுத் தளத்தின் கட்டமைப்பினை வரையறுப்பதற்காக தரவுத் தள நிருவாகியினால் பயன்படுத்தப்படும் உயர்நிலைக் கணினி மொழி.

schematic : திட்ட முறையிலான; அமைப்புப் படம்; திட்ட முறை வரைபடம் : அமைப்புகளின் தொடர்புகளையும் அடையாளத்தையும் காட்டுகிற ஒரு மின்னணுச் சுற்றுவழியின் வரைபடம்.

schematic symbols : திட்டமுறைச் சைகைகள்; திட்ட முறைக் குறியீடுகள்; அமைப்புக் குறியீடுகள் : திட்ட முறை வரைபடங்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.

Scheutz, George : ஷியூட்ஸ், ஜார்ஜ் (1785-1873) : இவர் 1834இல், சார்லஸ் பாபாஜின் எந்திரம் போன்ற ஒர் எந்திரத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த எந்திரம் செய்து முடிக்கப்பட்டு, கணித அட்டவணைகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Schickhardt, Wilhelm (15921635) : ஷிக்ஹார்ட், வில்ஹெல்ம் (1592-1635) : ஜெர்மன் கணிதப் பேராசிரியர். கணிப்பு எந்திரத்தை 1624இல் கண்டு பிடித்தவர்.

schottky diode : ஸ்காட்கி இரு முனையம் : ஒரு திசையில் மட்டுமே மின்னோட்டத்தை அனுமதிக்கும் இரு முனையத்தில் ஒருவகை. இதில் ஒரு குறைகடத்தி அடுக்கும் ஒர் உலோக அடுக்கும் ஒன்றுசேர இணைக்கப்பட்டிருக்கும். அதி விரைவான நிலைமாற்று வேகமே (switching speed) இதன் சிறப்புக் கூறு.

scientific applications : அறிவியல் பயன்பாடுகள் : மரபாக எண்களை அடிப்படையாகக் கொண்ட, முன்னேறிய பொறியியல் கணித அல்லது அறிவியல் திறம்பாடுகள் தேவைப்படுகிற பணிகள். வணிகப் பயன்பாடுகளின் விரிவான கோப்புக் கையாளும் திறம்பாடுகள் அரிதாகத் தேவைப்படும்.

scientific computer : அறிவியல் கணினி : அதிவேகக் கணிதச் செய்முறைப்படுத்தலுக்கான தனி வகைக் கணினி.

scientific language : அறிவியல் மொழி : கணிதச் செய்முறைப்